வியாழன், 18 ஜனவரி, 2018

அவாளுக்கே சீக்கிரம் விபூதி அடிச்சிருவாரு ஸ்ரீ ஸ்ரீ நித்தியானந்த சுவாமிகள்

Troll Trousers 2.0 : இன்னிக்கு காலையில் பார்த்த ஒரு சிறப்பான விடியோவால் வேலை நேரம் போக மிச்ச நேரம் எல்லாம் நித்தியானந்தாவை அலசியதில் எனக்கு புரியவந்த உண்மை என்னன்னா நித்திக்கு ஒரு கொடூர fanbase இருக்கு..
இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னன்னா இதில் யாருமே படிக்காதவர்களோ, அறியாமையில் இருப்பவர்களோ, கஷ்டத்தில் இருக்கும் அன்னாடங்காட்சிகளோ, பணத்திற்கு கஷ்டப்படும் மக்களோ அல்ல.. இன்னும் சொல்லப்போனா நடுத்தர மக்கள் கூட இல்லை.. எல்லாருமே பணமும் பதவியும், வெளிநாட்டு பட்டங்களும், நுனிநாக்கு ஆங்கிலமும்
ருக்கும் elite class..
இந்த கூட்டம் முக்காவாசி first world countries'இல் இருக்கும் NRI's.. இதும் இல்லாம வெள்ளையர்கள், கருப்பார்கள், சீனர்கள்னு இன வேறுபாடே இல்லாம நித்தியின் followers லிஸ்ட் பெருசா போயிக்கிட்டே இருக்கு.. இவர்கள் தொடர்ந்து அவரவர் நாட்டிலும் சிறு சிறு குழுக்களாக நித்தியின் மதத்தை பரப்பிக்கொண்டே வருகிறார்கள்..
தன் வீட்டில் இருக்கும் பெண்குழந்தை மூலமாகவோ அல்லது அம்மா மூலமாகவோ தான் இவர்கள் இந்த வட்டத்திற்க்குள் கொண்டு வரப்படுகிறார்கள்..
நான்கில் ஒரு பங்கு ஆண்களும் இக்கூட்டத்தில் உண்டு..
இவனுங்க கிட்ட இருந்து networking, branding, marketing'னு பல மேட்டர் கத்துக்கலாம்..
எங்கோ ஒரு ஓரத்தில் இதையெல்லாம் பாக்கும்போது எனக்கு 1984 U.S oregon இல் நடந்த rajneesh சம்பவத்தை நினைவுபடுத்துது.. இதே godman method தான் அங்கேயும் பின்பற்றபட்டது.. எனவே நம் govt. இப்ப இருந்தே இவர்கள் மேல் கொஞ்சம் கண்காணிப்பு கேமராவை திருப்பனும்.. இந்த சம்பவத்தை பற்றி தெரியாதவர்கள் இந்த link இல் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
https://en.m.wikipedia.org/wiki/Bhagwan_Shree_Rajneesh
அப்புறம் பக்தாக்களே, நித்தி சீடர்கள் காவி உடையில் இருக்கிறார்கள், ஆண்டாளுக்காக வைரமுத்துவை திட்டுறாங்கனு ரொம்ப சந்தோஷப்பட்டுக்க வேணாம்.. நித்தி எந்த இடத்திலும் எந்த இந்து கடவுளையும் promote செய்வதில்லை.. நித்தியின் பக்தா எல்லாம் நித்தியின் போட்டோவையும் சிலையையுமே பூஜை செய்கிறார்கள்.. அவர்கள் promote செய்யும் உருவ வழிபாடே நித்தி எனும் கடவுள் தான்..
அதாவது உங்களுக்கு போட்டியா ஒரு புது மதம் இன்னும் சில ஆண்டுகளிலோ நித்தியின் மறைவுக்கு பின்னரோ அரங்கேறப்போவது நிச்சயம்.. அதுவும் elite class'இன் மொத்த சில்லரையையும் அந்த கூட்டம் அள்ள வாய்ப்பிருக்கு.. உசாரா இருந்துக்குங்க, அவிங்களுக்கு முட்டு குடுத்துட்டு இருந்தீங்கன்னா உங்களுக்கே சீக்கிரம் விபூதி அடிச்சிருவாரு ஸ்ரீ ஸ்ரீ நித்தியானந்த சுவாமிகள் 🙏
- Sathya Gowtham
தலைமை குருக்கள்,
சென்னை கிளை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக