புதன், 31 ஜனவரி, 2018

அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வத்தின் கையாட்கள் தாக்கி வசந்தாமணி கொலை ... மேடை போட்ட காசை கேட்டவருக்கு ...

Veera Kumar - Oneindia Tamil வேலூர்: அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வத்தை தாக்கிய வாலிபர் மர்மமான முறையில் மரணமடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் கலசப்பாக்கத்தை சேர்ந்தவர் வசந்தா மணி என்கிற மணிகண்டன். கடந்த 20ம் தேதி அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம் பங்கேற்றார். அப்போது பன்னீர்செல்வத்தின் காலில் விழுவதை போல சென்ற வசந்தா மணி, திடீரென அவரை அறைந்தார். எம்எல்ஏவுக்கு அறை எம்எல்ஏவுக்கு அறை இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, எம்எல்ஏவை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் வசந்தா மணி. எம்எல்ஏ தன்னை பதிலுக்கு தாக்கியதாக வசந்தாமணி தரப்பும் புகுார் கொடுத்திருந்தது. ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட, 4 நாட்களில் திடீரென வசந்தாமணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டு, கடந்த 24ம் தேதி வேலூர் அரசு மருத்துவமனையில் அவரை போலீசார் அனுமதித்தனர். 
 மருத்துவமனையில் அனுமதித்த பிறகும், அவருக்கு டாக்டர்கள் சிகிச்சையளிக்கவில்லை என கூறப்படுகிறது. 2 நாட்களாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதால், வசந்தாமணியின் வழக்கறிஞரும், உறவினர்களும் கொடுத்த அழுத்தத்திற்கு பிறகு டாக்டர்கள் சிகிச்சையை தொடங்கியுள்ளனர்.
 மூளையில் ரத்தம் கட்டியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதன்பிறகு, மருத்துவமனையில் படுக்கையிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார் வசந்தா மணி. ஆனால், இன்று காலை திடீரென அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். எம்எல்ஏ ஆட்கள் தாக்கியதாக புகார் எம்எல்ஏ ஆட்கள் தாக்கியதாக புகார் எம்எல்ஏவை வசந்தாமணி தாக்கியதால் எம்எல்ஏ தனது ஆட்களை வைத்து அவரை தாக்கியதாகவும், அதனால்தான் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மூளையில் ரத்தம் கட்டியதாகவும் கடந்த 24ம் தேதியே, காவல் நிலையத்தில், வசந்தாமணி குடும்பத்தினர் புகார் அளித்ததாகவும், அதை போலீசார் ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 யார் இந்த வசந்தாமணி யார் இந்த வசந்தாமணி வசந்தாமணி பொது நிகழ்ச்சிகளுக்கு பந்தல் மற்றும் சேர் போடும் தொழில் செய்து வந்தார்.
முன்பு ஒருமுறை, எம்எல்ஏ பன்னீர்செல்வம் தொடர்புள்ள ஒரு நிகழ்ச்சிக்கு சேர், பந்தல் போன்றவற்றை சப்ளை செய்துள்ளார். ஆனால், எம்எல்ஏ தரப்பு ரூ.20,000 தரவில்லை என்று கூறப்படுகிறது. தனது பணத்தை தருமாறு பலமுறை கேட்டு பார்த்தும் பணத்தை கொடுக்காததால் வெறுப்படைந்து, வசந்தாமணி எம்எல்ஏவை தாக்கியதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக