செவ்வாய், 9 ஜனவரி, 2018

எட்வர்டு ஸ்னோடன் : ஆதார் ஊழலை அம்பலபடுத்திய இந்திய பத்திரிகை .... சர்வதேச விருது வழங்க படவேண்டும்

  Edward Snowden @Snowden
The journalists exposing the breach deserve an award, not an investigation. If the government were truly concerned for justice, they would be reforming the policies that destroyed the privacy of a billion Indians. Want to arrest those responsible? They are called @UIDAI. https://twitter.com/rahulkanwal/status/949847121884262401 
Aadhaar Expose: Edward Snowden Praises Tribune Journalist, Says UIDAI Officials Should Be Arrested

tamilthehindu :இந்தியாவில் ஆதார் தொடர்பான விதிமீறல்களை தெரியப்படுத்தும் பத்திரிகையாளர்களுக்கு விருது வழங்க வேண்டுமே தவிர விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது என்று அமெரிக்கா குறித்த ரகசியத் தகவல்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடன் தெரிவித்துள்ளார்."ரூ.500 அளித்தால் ஆதார் விவரங்களை தரகர் மூலம் 10 நிமிடங்களில் பெற்றுவிடலாம்" என்று சண்டிகரில் இருந்து வெளியாகும் 'தி டிரிபியூன்' பத்திரிகையில் செய்தி வெளியானது.

இதைத் தொடர்ந்து ஆதார் ஆணையம் அளித்த புகாரின்பேரில் அந்த பத்திரிகையின் பெண் நிருபர் ரச்னா கைரா மீது டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவர் மீதும் அவர் குழுவின் மீதும் மூன்று பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஆதார் தொடர்பான விதிமீறல்களை தெரியப்படுத்தும் பத்திரிகையாளர்களுக்கு விருது வழங்க வேண்டுமே தவிர விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது என்று அமெரிக்கா குறித்த ரகசியத் தகவல்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இது தொடர்பான செய்தியை குறிப்பிட்டு எட்வர்டு ஸ்னோடன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆதார் தொடர்பான விதிமீறல்களை வெளிக்கொண்டு வரும் பத்திரிகையாளர்களுக்கு விருது வழங்க வேண்டும். விசாரணை அல்ல. இந்திய அரசாங்கம் உண்மையில் நீதியின் மீது அக்கறை கொண்டிருந்தால் கோடிக்கணக்கான இந்தியர்களின் தனியுரிமையை அழிக்கும் ஆதார் திட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். அதை தவிர்த்து பொறுப்பான பத்திரிகையாளரை கைது செய்ய விரும்புகிறீர்களா?”என்று பதிவிட்டுள்ளார்.
யார் இந்த எட்வர்டு ஸ்னோடன்?
அமெரிக்காவின் உளவு ரகசியங்கள் பலவற்றை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்னோடன்.
பிற நாடுகளின் அரசு செயல்பாடுகளையும், சொந்த நாட்டு மக்களையும் அமெரிக்க உளவு அமைப்புகள் தொடர்ந்து ரகசியமாக கண்காணித்து வருவதை அவர் உலகுக்கு பகிரங்கப்படுத்தினார்.
இதன் காரணமாக அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட எட்வர்டு ஸ்னோடன், அதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக