செவ்வாய், 9 ஜனவரி, 2018

காவியே வெளியேறு ! கோவன் பாடல்கள் | வீடியோ

வினவு :இனியும் இந்த அரசமைப்பை தூக்கி சுமக்க வேண்டியதில்லை என்பதை மகஇக பாடகர் தோழர் கோவன் மற்றும் ம.க.இ.க கலைக்குழுவின் பாடல்கள் உணர்ச்சியுடன் இசைக்கின்றன.

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் கடந்த 2017 -ம் ஆண்டில் நடந்த மக்கள் போராட்டங்களையொட்டி வெளியிடப்பட்ட பாடல்களின் தொகுப்பை நக்கீரன் இணைய தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
2017 -ம் ஆண்டின் துவக்கமே மெரினா எழுச்சியுடன் தான் தொடங்கியது, அப்போராட்டமானது தமிழகத்தில் காவிகள் காலூன்ற முடியாது என பறைசாற்றியது. அதைத் தொடர்ந்து நீட் தேர்வு விசயமாகட்டும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஆகட்டும் எதுவானாலும் காவி கும்பலுக்கு இது வேற தமிழ்நாடு என நிரூபித்து வருகிறது.
மெரினா கரையில் நடந்த எழுச்சியாகட்டும், 2017 -ம் ஆண்டின் இறுதியில் குமரிக்கரையில் பல மீனவ மக்ககளைக் காவு வாங்கிய ஒக்கி புயலாகட்டும் அனைத்தும் இந்த அரசமைப்பின் கையாலாகத்தனத்தை காட்டிவிட்டது. ஆக இனியும் இந்த அரசமைப்பை தூக்கி சுமக்க வேண்டியதில்லை என்பதை மகஇக பாடகர் தோழர் கோவன் மற்றும் ம.க.இ.க கலைக்குழுவின் பாடல்கள் உணர்ச்சியுடன் இசைக்கின்றன.
“நக்கீரன்” பத்திரிகைக்கு எமது நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக