புதன், 31 ஜனவரி, 2018

கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கு குற்றவாளி கைது

கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றவாளி கைது
59 மாலைமலர்: பேர் கொல்லப்பட்ட கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் 16 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி யாகூப் படாலியாவை போலீசார் கைது செய்தனர். ஆமதாபாத்:< குஜராத் மாநிலம் கோத்ரா ரெயில் நிலையம் அருகில் 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி ஒரு கும்பல் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு தீவைத்தது. இதில் கரசேவை தொண்டர்கள் 59 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் கோர்ட்டு 31 பேருக்கு தண்டனை விதித்தும், 63 பேரை விடுதலை செய்தும் உத்தரவிட்டது. இந்த ரெயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் யாகூப் படாலியா (வயது 63) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் அவர் இதுவரை போலீசாரிடம் சிக்காமல் இருந்தார். நேற்று யாகூப் கோத்ரா பகுதியில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று யாகூப் படாலியாவை கைது செய்தனர். அவரை இந்த வழக்கை விசாரித்த சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைப்போம் என்று போலீசார் தெரிவித்தனர்.

யாகூப் படாலியாவின் சகோதரர் காதிர் படாலியா 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணையின்போதே சிறையில் இறந்துவிட்டார். மற்றொரு சகோதரர் அயூப் படாலியா ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வதோதரா சிறையில் உள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக