புதன், 17 ஜனவரி, 2018

ஆன்மிகம் பாதி ..பகுத்தறிவு பாதி ,,, நித்திக்கு போட்டியாக கோடம்பாக்கம்

சுவாதி : நாட்டில் உள்ள இன்னொரு பெரிய பிரச்சனை.. இந்த "அரைகுறை ஆன்மீகவாதிகள்"  "பாதி பகுத்தறிவாதிகள்".
பாதி பகுத்தறிவாதிகள் - தன்னை தனியாக காட்டிக்கொள்ள "பகுத்தறிவாதியாக" மாறியவர்கள். முகநூலில் நிறைய பேர் பார்க்கிறேன். இவர்களை பொறுத்தவரைக்கும் "கடவுள் எதிர்ப்பு", "பார்ப்பனர் எதிர்ப்பு" இந்த ரெண்டு மட்டும் தான் "பகுத்தறிவு". வேறு ஒன்றும் இவர்களுக்கு தெரியாது. ஒரு நல்ல பகுத்தறிவாதி அன்பேசிவம் கமல் கேரக்டர் மாதிரி இருக்கணும்.
அரைகுறை ஆன்மீகவாதி - ஆன்மீகம் என்றால் என்ன? மதத்திற்கும்
ஆன்மீகத்திற்கும் என்ன வித்தியாசம்? ஒவ்வொரு மதமும் என்ன கருத்து சொல்கிறது? இந்த மூன்று அடிப்படை கேள்விக்கு கூட விடை தெரியாமல் நான் பெரிய ஆன்மிகவாதியாக்கும் அது இதுனு ஆன்மீகத்தில் அவருக்கு தெரிந்த அரைகுறை அறிவில் எதாவது பேசுபவர்.. "ஆன்மீக அரசியல்வாதி" மாதிரி குழப்பமானவர்கள்.

சரி ஒரு நல்ல ஆன்மீகவாதி எப்படி இருக்க வேண்டும்.. அவரும் அன்பேசிவம் கமல் போல தான் இருக்க வேண்டும்.. ஆனால் நாட்டில் அன்பேசிவம் நாசர் கேரக்டர் தான் அதிகம்.
ஒரு தெளிவான ஆன்மீகவாதி கண்டிப்பாக பகுத்தறிவாதியாக தான் இருக்கமுடியும்.
ஒரு தெளிவான பகுத்தறிவாதியும், தெளிவான ஆன்மீகவாதியும் முதலில் நல்ல மனிதராக இருப்பார்கள். "மனிதம்" தான் இவர்களை ஒருங்கிணைப்பு செய்கிறது. முதலில் நல்ல மனிதனாக முயற்சி செய்யவும்.. அப்புறம் தான் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று எல்லாம்.. 🙏🙏🙏
- சுவாதி, திருநெல்வேலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக