செவ்வாய், 9 ஜனவரி, 2018

இசையும் ஜாதியும் சேர்ந்தே இருப்பவையா ? சேராது இருப்பவையா ?

Shalin Maria Lawrence : இசைக்கு ஜாதி இல்லை இசை வேளாளர் என்கிற ஒரு ஜாதியே இங்கு இருக்கிறது அறிவாளிகளே. அதுமட்டுமில்லாமல் அந்த சமூகத்தை சார்ந்த பெண்கள் தேவதாசிகளாக அடிமை படுத்தப்பட்டார்கள்கள்.அவர்களின் ஆண்கள் சட்டை இல்லா வெறும் உடம்போடு இசைக்க கட்டாயப்படுத்தபட்டார்கள். மேளக்கார்கள் என்று அழைக்கப்பட்ட அவர்கள் பந்தியில் மற்றவர்கள் சாப்பிட்ட பின் கடைசியில் தான் சாப்பிட வேண்டும். அவர்களுக்கு மேலே துண்டு போடும் உரிமையை திராவிட இயக்கதலைவர் திரு பட்டுக்கோட்டை அழகிரி வாங்கி தந்தார். அதன் நினைவில் தான் அந்த சமூகத்தை சேர்ந்த தலைவர் கலைஞர் தன் பிள்ளைக்கு அழகிரி என்று பெயரிட்டார். அந்த சமூகத்தை சார்ந்த நாதஸ்வர வித்வான் டி என் ராஜரத்தினம் பிள்ளை கோயில் ஒன்றில் வாசிக்க போக ,அவரை சட்டை அணிய விடாமல் செய்ய,சட்டை போடாமல் வாசிக்க மாட்டேன் என்று அவர் தீர்க்கமாய் கூற வேறு வழியின்றி அவரை சட்டை அணிய அனுமதித்தது இன்னொரு வரலாறு. இவ்வளவு இருக்கிறது மக்களே.... இதில் எதுவும் தெரியாமல் இசைக்கு ஜாதி இல்லை என்று சொல்லுவதெல்லாம் உச்ச பட்ச முட்டாள்தனம்/அயோக்கியத்தனம். இசைக்கு ஜாதி இல்லை
இசை வேளாளர் என்கிற ஒரு ஜாதியே இங்கு இருக்கிறது அறிவாளிகளே.
அதுமட்டுமில்லாமல் அந்த சமூகத்தை சார்ந்த பெண்கள் தேவதாசிகளாக அடிமை படுத்தப்பட்டார்கள்கள்.அவர்களின் ஆண்கள் சட்டை இல்லா வெறும் உடம்போடு இசைக்க கட்டாயப்படுத்தபட்டார்கள். படத்தில்இருப்பவர்கள்   பாலசரஸ்வதி ..   எம் எஸ் சுப்புலக்ஷிமி

மேளக்கார்கள் என்று அழைக்கப்பட்ட அவர்கள் பந்தியில் மற்றவர்கள் சாப்பிட்ட பின் கடைசியில் தான் சாப்பிட வேண்டும்.

அவர்களுக்கு மேலே துண்டு போடும் உரிமையை திராவிட இயக்கதலைவர் திரு பட்டுக்கோட்டை அழகிரி வாங்கி தந்தார். அதன் நினைவில் தான் அந்த சமூகத்தை சேர்ந்த தலைவர் கலைஞர் தன் பிள்ளைக்கு அழகிரி என்று பெயரிட்டார்.
அந்த சமூகத்தை சார்ந்த நாதஸ்வர வித்வான் டி என் ராஜரத்தினம் பிள்ளை கோயில் ஒன்றில் வாசிக்க போக ,அவரை சட்டை அணிய விடாமல் செய்ய,சட்டை போடாமல் வாசிக்க மாட்டேன் என்று அவர் தீர்க்கமாய் கூற வேறு வழியின்றி அவரை சட்டை அணிய அனுமதித்தது இன்னொரு வரலாறு.
இவ்வளவு இருக்கிறது மக்களே....
இதில் எதுவும் தெரியாமல் இசைக்கு ஜாதி இல்லை என்று சொல்லுவதெல்லாம் உச்ச பட்ச முட்டாள்தனம்/அயோக்கியத்தனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக