புதன், 3 ஜனவரி, 2018

ரஜினி கட்சியில் லைகா நிறுவனத் தலைவர்! லைக்கா சொல்றான் ரஜினி செய்யறான் ..

ரஜினி கட்சியில் லைகா  நிறுவனத் தலைவர்!மின்னம்பலம் :லைகா நிறுவன இந்தியக் கிளையின் தலைவர் ராஜு மகாலிங்கம் ரஜினிகாந்த் கட்சியில் சேர முடிவு எடுத்திருப்பதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த லைகா நிறுவனம் இங்கிலாந்தைத் தலைமையகமாக வைத்துச் செயல்பட்டு வருகிறது. 23 நாடுகளில் இருக்கும் இந்த நிறுவனம் உலகின் பல நாடுகளில் சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டுவருகிறது. இந்தியாவிலும் லைகா தயாரிப்பு நிறுவனம் பெரிய அளவில் வளர்ந்துஇருக்கிறது. லைகா தயாரிப்பு நிறுவனத்தின் இந்தியக் கிளையின் தலைவராக ராஜு மகாலிங்கம் செயல்பட்டுவந்தார். இவர் ரஜினியின் தீவிர ரசிகர். ரஜினியின் 2.0 படத்தைத் தயாரிக்க இவர் அதிக முயற்சிகள் எடுத்ததாகக் கூறப்படுகிறது. தற்போது லைகா நிறுவனம்தான் அந்தப் படத்தைத் தயாரித்துவருகிறது.


கடந்த 31ஆம் தேதி ரஜினி தனிக் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில் ரஜினி ஆரம்பிக்கும் கட்சியில் சேரப்போவதாக ராஜு மகாலிங்கத்தின் ட்விட்டர் பக்கத்தில் உறுதியான தகவல் வெளியாகியுள்ளது . இதற்காக லைகா நிறுவன இந்தியக் கிளையின் தலைவர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார். இவருக்கு ரஜினி ஆரம்பிக்கும் கட்சியில் பெரிய அளவில் பொறுப்பு கொடுக்கப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக