செவ்வாய், 30 ஜனவரி, 2018

நீதிபதிகளின் சம்பளம் 200 வீதம் அதிகரிப்பு ... உச்ச ,உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு பம்பர் அரசாணை ....

மாலைமலர் :சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் ஊதியத்தை 200 சதவிகிதம் உயர்த்தும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் நீதிபதிகள் ஊதியம் 200 சதவிகிதம் உயர்வு: மத்திய அரசு அரசாணை புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து ஐகோர்ட்களில் பணியாற்றும் நீதிபதிகளின் ஊதியம் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் ஓய்வூதியத்தை உயர்த்தும் மசோதா கடந்த பாராளுமன்ற கூட்டத்தில் (ஜனவரி 4) நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவின் படி தற்போது உள்ளதை விட நீதிபதிகள் 200 சதவிகிதம் அதிக ஊதியம் பெற முடியும். இந்நிலையில், இதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் சம்பளம் மாதம் ரூ.2.80 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. இப்போது அவரது சம்பளம் ரூ.1 லட்சமாக உள்ளது. பிற சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மற்றும் ஐகோர்ட் தலைமை நீதிபதியின் மாதச் சம்பளம் ரூ.90,000-ஆக உள்ளது. இது மாதம் ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிற ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளம் ரூ.80,000 உள்ளது. இது மாதம் ரூ.2.25 லட்சமாக உயர இருக்கிறது. 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. 2016 ஜனவரி 1 முதல் இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வரும். இதன் மூலம் ஓய்வுபெற்ற நீதிபதிகள் சுமார் 2,500 பேரும் பயனடைவார்கள்div

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக