சனி, 20 ஜனவரி, 2018

காபரெட் சாமியார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரன் 1000 சில்லறை விற்பனை நிலையங்களை ஆரம்பிக்கிரான்

1000 விற்பனை மையங்கள் திறப்பு!மின்னம்பலம் :ஆன்மீகத் தலைவரான ரவி சங்கர், வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் விற்பனையில் 1000 சில்லறை விற்பனை மையங்களை 2018ஆம் ஆண்டு இறுதிக்குள் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து ’டபிள் ஸ்ரீ தத்வா’ நுகர்பொருள் விற்பனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அரவிந்த் வச்சார்யா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "ஆன்மீகத் தலைவர் ரவி சங்கரின் எஃப்.எம்.சி.ஜி நிறுவனமான ஸ்ரீ ஸ்ரீ தத்வா இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 1000 சில்லறை விற்பனை நிலையங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தக் கடைகளின் மூலம் ரூ.500 கோடி வருவாய் ஈட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.
இதன்படி உணவுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சுகாதாரம் சார்ந்த பொருட்கள் ஆகியவற்றை இந்நிறுவனம் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. அதேபோல ஆயுர்வேத மருந்துகள் மற்றும் லைஃப்ஸ்டைல் பொருட்கள் விற்பனையிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் பிக்பேஸ்கட் நிறுவனத்துடன் இணைந்து ஆன்லைன் விற்பனையிலும் இந்நிறுவனம் ஈடுபடுகிறது. 120க்கும் அதிகமான பொருட்கள், 44 தனிநபர் பாதுகாப்புப் பொருட்கள், 82 உணவுப் பொருட்கள் ஆகியவற்றை விரைவில் பிக்பேஸ்கட் வழியாக ஆன்லைனில் வாங்கலாம் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் இ-காமர்ஸ் துறையில் விற்பனையைத் தொடங்கப்போவதாகக் கூறியுள்ள சூழலில் ரவி சங்கரின் நிறுவனமும் இ-காமர்ஸ் சந்தையில் ஈடுபட முடிவெடுத்துள்ளது. பதஞ்சலி நிறுவனம் இந்தியாவின் முக்கிய இ-காமர்ஸ் தளங்களாகக் கருதப்படும் அமேசான், ஃபிளிப்கார்ட், பேடிஎம் மால், பிக்பேஸ்கட் மற்றும் ஃகுரோப்பர்ஸ் ஆகிய தளங்களில் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக