புதன், 27 டிசம்பர், 2017

NTK - தமிழ்ச்சாதி வெறியர்களாக அல்லது அரசியல் தெளிவற்ற அப்புராணிகளாக .... நாம் தமிழர் கட்சி?

வாசுகி பாஸ்கர் : நாம் தமிழர் களம், திராவிட அரசியலின் பாதையை நினைவுபடுத்துகிறது - நெல்சன் சேவியர்
# திராவிட அரசியல் மக்களுக்கான அரசியலை பேசி களம் கண்டவர்கள். அறிவுஜீவிகள் பார்ப்பனவாதிகளாக தான் இருப்பார்கள் என்கிற கட்டமைப்பை உடைத்து அறிவால் அதிகாரத்தை அடைந்தவர்கள்.
ஆனால் சீமானின் நாம் தமிழர்
கூட்டம், சாதிய கட்டமைப்பால் உருவான ஒரு மூடர்கூட்டம். தமிழ்த்தேசியம் என்பது எந்த காலத்துக்கும் அமையாது என்பதை ஊர்ஜிதமாய் தெரிந்துகொண்டு திமுகவை வீழ்த்த funding செய்யப்படும் ஒரு சாதிக்கூடாரம்.
அந்த கூட்டத்திற்கு இரையாகிறவர்கள் ஒன்று தமிழ்ச்சாதி வெறியர்களாக இருக்கிறார்கள் அல்லது அரசியல் தெளிவற்ற அப்புராணிகளாக இருக்கிறார்கள். நாளொரு பொய்யும், அறிவுக்கு ஒவ்வாத புனைவுகளையும் சொல்லியே மூடர் கூட்டத்தை உருவாக்கும் சீமான் போன்றவர்களை, திராவிட இயக்க ஆரம்பகால அரசியலை ஒப்பிடுவது உண்மையிலயே முரண்.

திமுக முன்னெடுக்க மறந்த கள அரசியல் வெற்றிடத்தை இந்த மாதிரியான மேடை மூடர்கள் மூடர்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று சொல்வது வேண்டுமானால் நியாயமானதாக இருக்கலாம்.
அறிவுக்கு ஒவ்வாத சீமானை திராவிட அரசியல் பாதையை மேற்கோள் காட்டுவது எந்த வகையிலும் பொருத்தமில்லாதது! திராவிட அரசியலின் முன்னேற்றத்தால் படித்து, பணம் வந்து, பணம் வந்ததும் சாதி திமிர் தலையெடுக்கும் சாதிக் கூட்டமே ஒழிய, இந்த மிகைப்படுத்தல் அதீதமானது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக