Gone With The Wind கோன் வித் த வின்ட் ...இது 1939 வெளியான ஹாலிவூட் திரைக்காவியம், இதுவரை இதன் வசூல் சாதனையை வேறு ஒரு திரைப்படமும் முறியடிக்கவில்லை. அதாவது $3,440,000,000 டொலர்கள் வசூலித்தது இன்னும் இதன் வியாபாரம் டிவிக்களிலும் டிவிடிக்களாலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
மார்கிரட் மிச்சல் என்ற பெண்மணியால் எழுதப்பட்ட ஒரே ஒரு நாவல் இதுதான் இது புலிட்சர் பரிசு பெற்றது . இது மிகப்பெரிய படமாகும் இதன் மூலப்பிரதியான நாவலும் மிகவும் பெரியதாகும், இதன் கதையை சுருக்கமாக காட்டுவது கூட மிகவும் கடினமாகும், இதைபடமாக்க MGM Panavision போன்ற பெரிய நிறுவனங்கள் தயங்கி கொண்டிருந்த வெளியில் டேவிட் சொல்செனிக் என்ற ஒரு தயாரிப்பாளர் முன்வந்தார். சுமார் இரண்டுவருடங்கள் பலவித இன்னல்களையும் சோதனைகளையும் தாண்டவேண்டி இருந்தது. படப்பிடிப்ப்பு நடந்த சில காலத்திலேயே இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் வேற்றுமை அதிகமாகி இயக்குனர் சென்றுவிட்டார்.பின்பு விக்டர் பிளெமிங் என்ற ஒரு இயக்குனரை கொண்டு பெரும்பகுதி படத்தை எடுத்து முடித்தார்கள்.
இதன் படப்பிடிப்பு அந்த காலத்திலேயே மிகவும் நேர்த்தியுடன் எடுக்கப்பட்டது. படத்தில் மிகவும் சிலாகித்து பேசப்பட்ட விடயம் அதன் வர்ண சேர்க்கையாகும். சில காட்சிகள் படமாக்கப்பட்ட பின்பு திருப்தி இல்லாததால் எடுக்கப்பட்ட பிலிம் மேல் மீண்டும் வர்ணங்கள் சேர்க்கப்பட்டன .இது அந்த காலத்தில் மிகவும் அற்புதமாக பரீட்சித்து பார்த்து வெற்றி அளிக்கப்பட்ட தொழில்நுட்பமாகும் .
இது போல இன்னும் பலவித தகவல்கள் இந்த திரைப்படத்தை பற்றி கூறலாம். உதாரணாக அட்லாண்டா நகரம் எரிக்கப்படும் காட்சியை பெரும் பொருட்செலவில் எடுக்க யோசித்து கொண்டிருந்த வேளை
Warner சகோதர்களின் அலாவுதீன் என்ற பிரமாண்ட படத்திற்கு கட்டப்பட்ட
செட்டை விலைக்கு வாங்கி அதை எரித்து படமாக்கினார்கள். அப்பொழுது அவர்கள் புதிதாக ஒரு அதிநவீன கமராவை பயன் படுத்தினார்கள் .அந்த காட்சிக்கு எட்டு கமெராக்கள் பயன்படுத்தினார்கள். அப்பொழுது உலகத்தில் இருந்த அந்த அதி நவீன கமெராக்கள் எட்டுமே இந்த காட்சிக்கு பயன்படுத்த பட்டது.
இதன் கதை அமெரிக்க சிவில் யுத்தத்தை மையமாக கொண்டது. தெற்கு ஜார்ஜியாவில் இருந்த பண்ணை அடிமை கலாசாரத்தின் பிரபுத்துவ வாழ்க்கை முறைக்கும் வட அட்லாண்டியாவின் தொழிற்புரட்சியினால் உருவான ஜனநாயக வர்த்தக புரட்சிக்கும் இடையிலானது. சிவில் யுத்தத்தின்
பின்னணியில் காதல், பண்ணை, குடும்பம், யுத்தம், தேசப்பற்று, கருப்பு இனமக்களின் வாழ்க்கை போன்ற ஏராளமான விபரங்களை கொண்டது. ஆபிரஹாம் லிங்கன் ஜனாதிபதியாக பதவி ஏற்றதும் அதிதீவிரமாக அமெரிக்க எங்கணும் ஒரே விதமான மனித உரிமைகளுக்காக சட்ட ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டார், அவற்றை ஜார்ஜியாவில் இருந்த பரம்பரை பண்ணை பிரபுக்கள் எதிர்த்தார்கள்.
இந்த சண்டையில் சிக்கிய ஒரு பண்ணை குடும்பத்தினரை சுற்றி இந்த கதை அமைந்துள்ளது.
ரெட் பட்லர் என்ற ClarkGable க்கும் ஸ்கார்லட் ஒ ஹாரா என்ற Vivien Leigh இடையில் உள்ள காதல் மோதல் பிரிவு சண்டை கருத்து வேறுபாடு சோகம் தீராத சோகம் ஸ் கார்லட் தனது அக்காவின் கணவர்மீது கொண்டுள்ள அதீத காதல் .அது உண்மையில் ஒரு சிறுபிள்ளையின் அடம்பிடிக்கும் செயல் அன்றி உண்மையில் அது ஒருபோதும் ஒரு காதலாக இருந்திருக்கவில்லை .இதை அவள் உணரும் நேரம் கொஞ்சம்
தாமதமாகிவிட்டது . ஸ்காலட்டின் காதலுக்காக வாழ்க்கையில் ஏராளமான தனது காலத்தையும் சக்தியையும் விரயம் செய்தும் அவள் ஒரு போதும் அதை உணரமாட்டாள் என்ற முடிவுக்கு அவன் வரும்போது ..
அவளின் கனவு கலைந்தது ஆனால் எல்லாம் கைமீறி போய்விட்டது, சிவில் யுத்தம் அவர்களின் பிரபுத்துவ வாழ்க்கைக்கு முடிவு கட்டிவிட்டிருந்தது.
இல்லாத ஜாமீனை இருப்பதாக காட்டிக்கொண்டு எப்பொழுதும் பயந்து பயந்து வாழும் வாழ்க்கையே பண்ணைகள் வைத்திருந்தோர் வாழவேண்டி இருந்தது.
ஜார்ஜியாவுக்காக் போராடியோர் தோற்று எல்லாவிதத்திலு அழிவுதான் அவர்களுக்கு மிஞ்சி இருந்தது,
ரெட் பட்லர் ஸ்கார்லட் தம்பதிகளின் ஏராளமான கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும் அவர்களை கணவன் மனைவியாக பிணைந்து வைத்திருந்த அவர்களின் செல்ல மகள் குதிரையில் ஏறி விழுந்து இறந்து விட்டதும் ரெட் பட்லருக்கு வாழ்க்கையில் எல்லாமே வெறுத்து விட்டது.
சதா மனதிற்குள் தனக்கு உண்மையில் பொருத்தம் இல்லாத ஒருவரை ஒரு ஆதர்ச ஆண்மகனாக எண்ணிக்கொண்டு அவன்மேல் கவர்ச்சி கொண்டிருக்கும் ஸ்காலர்டின் மனதிலும் கொஞ்சம் மாற்றம் வரத்தொடங்கியது,
அது ரெட் பட்லருக்கு தெரியவில்லை. அவளும் தான் தற்போது உண்மையிலேயே ரெட் பட்லரைதான் காதலிக்கிறேன் என்பதை சரியாக கூறவில்லை .
அவர்களிடேயே உருவாகியுள்ள தப்பபிராயங்கள் அளவு கடந்து போயிருந்தது.
உண்மையில் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்தார்கள் .இருவரும் பலவிடயங்களிலும் மிகவும் பொருத்தமான தம்பதிகள்தான்,
கோர யுத்தத்தின் பல்வேறு இக்கட்டுக்களிலும் அந்த குடும்பத்தினரையும் இதர பண்ணை ஆட்களையும் பலவிதத்திலும் இந்த இருவரும்தான் காத்தார்கள்.
இறுதிகட்டத்தில் ரெட் பட்லர் ஸ்கார்லட்டை விட்டு தான் பிரியவேண்டிய நேரம் வந்துவிட்டதாக தெரிவித்தான். இங்கிலாந்துக்கே சென்று விட போவதாக கூறினான்
அவன் கூறியதை நம்பாமல் கண்களை விரித்து பார்த்தாள் ..
அவன் நிச்சயம் போகத்தான் போகிறான் ..
அவள் அழுது கதறி பார்த்தாள் ...
அவனுக்கு இப்போது அவள் மேல் நம்பிக்கை இல்லை.
இனியும் உன் காதலை எண்ணி காத்திருக்க எனக்கு வயதும் இல்லை ....இனியும் என்னால் துன்பங்களை தாங்க முடியாது ..என்று கூறிக்கொண்டே செல்கிறான் ......
வெறிச்சோடிய பன்னிரண்டு ஏக்கர் பண்ணை .....வீடு....எல்லோரும் மடிந்து விட்டனர் அல்லது எங்கேயோ போய்விட்டனர்,...
நான் ஏன் இந்த உலகில் இருக்க வேண்டும் ?
எனக்கு இனி என்ன இருக்கிறது?
எல்லாம் என்னை விட்டு போய்விட்டது ...
யுத்தத்தின் புயலில் எனது சந்தோஷங்கள் ...எனது குடும்ப உறவுகள்...எல்லாம் அந்த புயலோடு போய்விட்டது .....என்று புலம்பிக்கொண்டே முழங்காலில் நின்றுகொண்டு அழுதாள் ...
வெறிச்சோடிய ...கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெறும் புழுதி படிந்த பயிர்கள் பாலைவனமாக காட்சி அளித்தது.....
அப்பொழுது அவளுக்குள் அவளது அப்பா இறக்கும்பொழுது கூறிய வாசங்கள் மெதுவாக நினைவுக்கு வரத்தொடங்கியது ....
தாரா தாரா தாரா ( தாரா என்பது அந்த ஊரின் பெயர் )
*RHETT walks out of the house, into the fog. Scarlett is at the door, crying*****
SCARLETT: I can't let him go. I can't. There must be some way to bring him back. Oh, I can't think about this now! I'll go crazy if I do! I'll think about it tomorrow. *****SCARLETT walks towards the stairs*****
SCARLETT:But I must think about it! I must think about it! What is there to do? What is there that matters?
GERALD: (in Scarlett's head) Do you mean to tell me, Katie Scarlett O'Hara that Tara doesn't mean anything to you? Why land is the only thing that matters, its the only thing that lasts.
ASHLEY: (in Scarlett's head) Something you love better than me, though you may not know it. Tara.
RHETT: (in Scarlett's head) This is where you get your strength, the red earth of Tara.
GERALD, ASHLEY, and RHETT: (in Scarlett's head) Tara! Tara! Tara!
SCARLETT: Tara! Home. I'll go home. And I'll think of some way to get him back. After all... tomorrow is another day!
அவளின் மனதுக்குள் ஒலித்த இந்த வாசகங்களை அதன் அர்த்தத்தில் அப்படியே தமிழில் எழுதும் ஆற்றல் என்னக்கில்லை .
மனதை சுக்கல் சுக்கலாக ஒடித்துவிடும் வாசங்கள் அவை.
ஆனாலும் வாழ்வின் மீது ஒரு நம்பிக்கையை அது தருகிறது. இந்த நிலம்தான் உண்மையில் சாசுவாசம் ஆனது.
வேறு ஒன்றுமே நிலையானதில்லை...
உனது பலம் வாழ்வு மகிழ்ச்சி எல்லாம் இந்த சிவப்பு மண்ணில் இருந்துதான் உனக்கு கிடைத்தது...
நீ என்னைவிட ஏன் உன்னையும் விட அதிகமாக நீ நேசித்தது இந்த மண்ணைத்தான்...
தாரா ....அது வீடு .....
நான் வீட்டுக்கு போவேன் .......
மீண்டும் எப்படியாவது அவரை பெறுவேன் .....
நாளை என்பது எப்படி பார்த்தாலும் ஒரு புது நாள்....தாரா தாரா ...
Wonderful Movie.Pls must watchWorld News in Tamil
பதிலளிநீக்கு