புதன், 27 டிசம்பர், 2017

தமிழ் ராக்கார்ஸிடம் கெஞ்சி கோரிக்கை வைக்கும் தயாரிப்பாளர்கள் .

Siva - Oneindia Tamil சென்னை: தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் இருக்க கோலிவுட் இயக்குனர்களோ படத்தை ரிலீஸ் செய்யும் முன்பு தமிழ் ராக்கர்ஸுக்கு கோரிக்கை விடுக்கத் துவங்கியுள்ளனர். ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்ய இயக்குனர், தயாரிப்பாளர் என்று படக்குழு படாதபாடு படுகிறது. இந்நிலையில் படம் ரிலீஸான அன்றே அதை வெளியிட்டு தயாரிப்பாளர்களின் வயிற்றில் அடித்து வருகிறது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். புதுப்படம் ரிலீஸானால் அதை எதிர்பார்த்து தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு செல்லும் பழக்கம் அதிகரித்துள்ளது. படத்தை ரிலீஸ் செய்யும் முன்பு இயக்குனர்கள் தமிழ் ராக்கர்ஸுக்கு கோரிக்கை விடுக்கத் துவங்கியுள்ளனர். வேலைக்காரன் பட ரிலீஸுக்கு முன்பு மோகன்ராஜா கூட தமிழ் ராக்கர்ஸுக்கு கோரிக்கை வைத்தார். பலூன் ஏதாச்சும் பாத்து பண்ணுங்க பாஸ் என்று பலூன் பட இயக்குனர் சினிஷும் தமிழ் ராக்கர்ஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் ராக்கர்ஸிடம் இயக்குனர்கள் கெஞ்சும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. சவால் சவால் ஏப்ரல் 2ம் தேதிக்கு பிறகு நீயா நானான்னு பார்த்துவிடுகிறேன் என்று கடந்த மார்ச் மாதம் நடந்த சிம்பா இசை வெளியீட்டு விழாவில் வீர வசனம் பேசினார் விஷால். ஆனால் அவரால் தமிழ் ராக்கர்ஸை ஒன்னும் செய்ய முடியவில்லை. தயாரிப்பாளர் சங்க தேர்தலின்போது கூறிய வாக்குறுதியை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. 
 தமிழ் ராக்கர்ஸை தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால் ஒழிப்பார் என்ற நம்பிக்கையை சினிமாக்காரர்கள் இழந்துவிட்டனர். அதனால் தான் நேரடியாக தமிழ் ராக்கர்ஸிடம் கோரிக்கை விடுக்கிறார்கள். என்ன செய்யப் போகிறீர்கள் விஷால்? சங்கம் சங்கம் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்திலேயே செய்ய வேண்டியது நிறைய உள்ளது. இந்நிலையில் அரசியலுக்கு போய் அசிங்கப்பட்டு வருவது தேவைதானா என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக