புதன், 27 டிசம்பர், 2017

சசிகலா உறவினர்கள் வீடுகளில் மீண்டும் வருமானவரி சோதனை .. மிடாஸ் ஆலையிலும்

tamilthehindu :சசிகலா உறவினர் இளவரசியின் மருமகன் கார்த்திகேயன் இல்லம் உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. கடந்த மாதம் நடந்த சோதனைக்கு பின்னர் மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது.
சசிகலா உறவினர், இளவரசியின் மருமகன் கார்த்திகேயனுக்கு சொந்தமான 6 இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை அடையாறில் உள்ள கார்த்திகேயனின் இல்லம், பள்ளிக்கரணை, தி.நகர், வடபழனி ஸ்ரீசாய் கார்டன்ஸ், படப்பையில் உள்ள மிடாஸ் ஆலை உட்பட 6 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இது தவிர கோவையிலுள்ள மைலேரிபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடக்கிறது.

மிடாஸ் ஆலைக்கு அட்டைப்பெட்டிகளை வழங்கக்கூடிய சாய் கார்டன்ஸ் நிறுவனம், மிடாஸ் ஆலைக்கு தொடர்புடைய பொருட்களை சப்ளை செய்யக்கூடிய நிறுவனங்கள் என்ன என்ற அடிப்படையில் ஆய்வு. ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் இந்த சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் சசிகலா உறவினர்கள் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என 187 இடங்களில் 1700 அதிகாரிகள் தலைமையில் சோதனை நடந்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த சோதனை என்று தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக