புதன், 13 டிசம்பர், 2017

நிலக்கரி ஊழல் வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு

 நிலக்கரி ஊழல் வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு
தினமலர் : நிலக்கரி ஊழல் வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு Colors: புதுடில்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கிய வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது. முந்தைய காங். தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஜார்க்கண்ட்மாநிலத்தில் ராஜ்ஹாரா என்ற பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் மேற்குவங்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டதில் பெருமளவு முறைகேடுநடந்ததாக புகார் எழுந்தது. இதனை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது இதில் அந்த தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டதாக முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் மதுகோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலர் குப்தா, முன்னாள் ஜார்க்கண்ட் தலைமைசெயலர் ஏ.கே. பாசு உள்ளிட்ட எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணையில் சாட்சியங்கள் அனைத்தும்விசாரிக்கப்பட்டுவிட்டன. இதையடுத்து இன்று (டிசம்பர் 13-ம் தேதி) தீர்ப்பு வெளியாக உள்ளது.அப்போது குற்றவாளிகள் 8 பேரும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக