புதன், 13 டிசம்பர், 2017

மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொலை

தினத்தந்தி :பாலி, சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. சென்னையை அடுத்த புழல் புதிய லட்சுமிபுரம் கடப்பா சாலை, முத்துமாரியம்மன் கோவில் தெருவில் ‘மகாலட்சுமி தங்க மாளிகை’ என்ற பெயரில் செயல்பட்டு வந்த நகைக்கடையின் மேல் தளத்தில் வாடகைக்கு இருந்த கொள்ளையர்கள், நகைக்கடையில் 3.5 கிலோ தங்கத்தை கொள்ளையடித்தனர். நகைக்கடை கொள்ளை தொடர்பாக சென்ராம், கோலாராம், சங்கர்லால், தவ்ராம் ஏற்கனவே கைது செய்யப்படுள்ள நிலையில், நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோரை பிடிக்க ராஜஸ்தான் மாநிலத்திற்கு தமிழக போலீசார் சென்றனர். ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது, காவல் ஆய்வாளர் பெரியபாண்டி என்பவர் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக்கொல்லப்பட்ட பெரியபாண்டி மதுரவாயல் சட்டம்- ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஆவார்.
கொள்ளையர்களுடனான மோதலின் போது, கொளத்தூர் காவல் ஆய்வார் முனிசேகர் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவத்தையடுத்து கூடுதல் தமிழக போலீசார் ராஜஸ்தானுக்கு செல்ல உள்ளனர். ராஜஸ்தான் போலீஸ், தமிழக போலீசாருக்கு உதவி செய்யாததே சம்பவத்துக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக