புதன், 6 டிசம்பர், 2017

ஹாசினி கொலைக்குற்றவாளி தஷ்வந்த் மும்பையில் கைது

nakkeeran சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய தஷ்வந்த், சென்னை மாங்காட்டில் தாயைக்கொன்று நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவாக இருந்து வந்த தஷ்வந்த், கைது செய்யப்பட்டார். மும்பையில் தலைமறைவாக இருந்த தஷ்வந்தை சுற்றி வளைத்து கைது செய்தது தமிழ்நாடு காவல்துறை. சென்னை மவுலிவாக்கத்தில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமி ஹாசினியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொன்று அனகாபுத்தூர் ஆற்றங்கரையோரம் எரித்த இளைஞர் தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். செப்டம்பர் 13-ல் குண்டர் சட்ட வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பின்னர் செலவுக்கு பணம் கேட்டு வீட்டில் சண்டை போட்டு வந்த அவர், ஒரு கட்டத்தில் பெற்ற தாயை இரும்புக்கம்பியால் அடித்துக்கொன்று அவர் அணிந்திருந்த 25 பவுன் நகைகளுடன் தப்பிச்சென்றார். இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர் தேடப்பட்டு வந்தார். இன்று மும்பையில் தலைமறைவாக தங்கியிருந்த தஷ்வந்த் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். மும்பையில் அவரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சென்னை கொண்டு வர முயற்சிகள் நடைபெறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக