திங்கள், 18 டிசம்பர், 2017

ஒட்டு இயந்திர தில்லு முல்லு ... பாஜக பெரும்பான்மையை நோக்கி ,,,ஹர்டிக் பட்டேல் குற்றச்சாட்டு


Parthiban Pakirisamy :உங்களின் புரிதலுக்காக....! மின்னணுவியல் இயந்திரம் இயங்க source coding இன்றியமையாதது. அதை மனிதர்கள்தான் வேட்புமனு ஏற்கப்பட்டு சின்னங்கள் மற்றும் வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் உறுதி செய்தபிறகு கிடைக்கும் மிகச்சிறிய இடைவெளி நாட்களில், தொகுதிவாரியாக மேலும் அதை நிரல்களாக (programme) செய்யவேண்டும்.....!
இதை புரிந்துகொள்வது சற்று கடினமே எனினும் இதுபற்றி போதிய விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்லும் முன்பாக; நம்முடைய இந்த அரசியலாளர்களின் நேர்மைத்தன்மையை உறுதிசெய்யவேண்டியுள்ளது என்க!
மனிதர்கள் தலையீடு இல்லாதது காகித வாக்குமுறை(conventional voting system) மட்டுமே என்று அறிக குழப்பத்தில் இருந்து தெளிக!
எல்லாவற்றிற்கும் மேலாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தையே வைத்திருக்கும் அமெரிக்கா மற்றும் மின்னணுவியலில் கொடிகட்டி பறக்கும் அய்ரோப்பிய நாடுகளே இந்தமாதிரியான LKG தொழில்நுட்பத்தை நம்பாத நிலையில்; இந்திய துணை கண்டத்தில் இன்னும் ஆதார் அட்டையில் ஆட்டுகுட்டி புகைப்படம் பதிகிற அளவில்தான் விஞ்ஞானம் வளர்ந்துள்ள நிலையில் மற்றும் இன்றுவரை ஒரு ஏடிஎம் இயந்திரத்தையே சரியாக பாதுகாக்க துப்பில்லாத இவர்களின் மின்னணு வாக்கு விஞ்ஞானம்; எந்த வகையிலும் பாதுகாப்பற்ற எளிதில் வாக்குகளை இடமாற்றம் செய்யும் வசதிபெற்ற மற்றும் வளர்ந்த நாடுகளால் கைவிடப்பட்ட முறை என்பதால்; இது முற்றிலும் ஏற்புடயதல்ல !
இறுதியாக மின்னணு வாக்கு முறையில் யார் யார் தோல்வியுற்றாலும் வெற்றிபெற்றாலும் அது மனிதர்கள் செய்கிற நிரல்கள் மூலமே என்று அறிக! வாக்களிக்கும் மக்களுக்கு காகித வாக்கு பெட்டியை தலைகீழாக கவிழ்த்துப்பார்த்து உறுதிசெய்துகொள்ளும் வசதி இதில் இல்லை என்பதோடு; பொதுமக்களுக்கு 100% புரியாத மற்றும் என்ன நடக்கிறது என்றே விளங்கிக்கொள்ள முடியாத ஒரு முறையை வைத்துக்கொண்டு, அதை நா கூசாமல் மக்களாட்சி என்று சொல்வதை எப்படி ஏற்பது சொல்லுங்கள்? அரசுக்கும் மக்களுக்கும் புரிவதுதானே நேர்மையான ஒன்றாக இருக்கமுடியும்? ஆக இதுபற்றி அரசியல் செய்யும் அரசியலாளர்கள் அல்லவா முதலில் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்?
தேர்தல் என்பது மனிதர்களின் தலையீடற்ற சாமானிய மக்களின் உண்மையான குரலாக இருக்கவேண்டும் அதற்கு காகித வாக்குமுறைதான் நம்பகமும் உறுதித்தன்மையும் வாய்ந்தது என்க !
பார்த்திபன் ப
18/12/2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக