திங்கள், 18 டிசம்பர், 2017

குஜராத்தில் கடும் போட்டி ...- மும்பை பங்குச் சந்தையில் சரிவு.. 700 புள்ளிகள் இறங்கின!

Shyamsundar - Oneindia Tamil குஜராத்தில் பாஜக-வை தெறிக்க விடும் காங்கிரஸ்- வீடியோ மும்பை: குஜராத்தில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டு இருப்பதால் மும்பை பங்கு சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மும்பை பங்கு சந்தையில் 700 புள்ளிகள் சரிந்து உள்ளது. தற்போது குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையின் தபால் வாக்கு முடிவில் பாஜக கட்சி முன்னிலை வகித்தது. Mumbai Stock Market goes down after BJP trails in Gujarat election ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்க தொடங்கி இருக்கிறது. பல முக்கிய தலைவர்கள் பல்வேறு தொகுதிகளில் பின்னடைவை சந்தித்து இருக்கின்றனர். பாஜக கட்சியின் முதல்வர் வேட்பாளர் விஜய் ரூபாணியும் பின்னடைவை சந்தித்து இருக்கிறார். இதன் காரணமாக மும்பை பங்கு சந்தை சரிவை சந்தித்து இருக்கிறது. இதனால் காலையில் நன்றாக தொடங்கிய சந்தை தற்போது 700 புள்ளிகள் சரிந்து இருக்கிறது. பங்கு சந்தை குஜராத் முடிவை பொறுத்து மேலும் குறைய வாய்ப்பு இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக