ஞாயிறு, 24 டிசம்பர், 2017

தினகரன் : நம்பிக்கை வாக்கெடுப்பில் அனைத்து சிலீப்பேர் செல்லுகளும் வெளியே வருவார்கள்

Mayura Akilan - Oneindia Tamil சென்னை: மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதற்கு அச்சாரமாக இந்த ஆர்.கே.நகர் தொகுதியின் வெற்றி அமைந்துள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். ராணி மேரிக்கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் வெற்றி பெற்ற சான்றிதழை பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், நாளை முதல் எனது செயல்பாட்டை பாருங்கள் என்று கூறினார். இனிமேல் நிகழப்போகும் மாற்றங்களை பொறுத்திருந்து பாருங்கள். காவல்துறையினரின் செயல்பாடு கண்டனத்திற்குரிய வகையில் உள்ளது. நான் ஆரம்பம் முதலே கூறி வருகிறேன் காவல்துறையினர் ஏவல்துறையாக செயல்படக் கூடாது எனவும் கூறியுள்ளார். மதுசூதனனுக்கு பாஜக, தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்துள்ளது. ஆளுங்கட்சி என்பதால் டெபாசிட் பெற்று தப்பித்துக்கொண்டனர் என டிடிவி விமர்சித்துள்ளார். பணப்பட்டுவாடா செய்ததாலேயே 2வது இடத்தை ஆளுங்கட்சி பெற்றுள்ளது. 58 வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் 58 வேட்பாளர்களில் மதுசூதனன் மட்டும் தப்பித்துக்கொண்டார்.& ஆர்.கே.நகரில் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை சிறப்பாக தொடருவேன். பொதுச்செயலாளர் அனுமதியோடு அனைத்தும் செயல்படுத்தப்படும் என டிடிவி. தினகரன் கூறினார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் புதிய சரித்திரத்தை எழுதியுள்ளது. அண்ணா காலம் போல இனி புதிய சரித்திரம் தொடங்கும் என்றார்.
 எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த ஆட்சி இன்னும் 2 மாதங்களில் முடிவுக்கு வரும் என்று தினகரன் கூறியுள்ளார். எடப்பாடி அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் எங்கள் பக்கம் வருவார்கள் என்று அவர் கூறினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அனைத்து ஸ்லீப்பர் செல்களும் வெளியே வருவார்கள். மேலும் வெற்றியை வழங்கிய ஆர்.கே.நகர் தொகுதி மக்களை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்றும் டிடிவி தினகரன் கூறினா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக