ஞாயிறு, 24 டிசம்பர், 2017

இப்படி எல்லாம் இருந்தா திமுகவை அந்த ஆண்டவனாலேயே காப்பாத்த முடியாது

ஜகஜால வித்தைகாரரான தினகரன் அதிமுகவை பிரிப்பார் ,மீட்டெடுப்பார் அப்படியே அந்த வித்தைகள் கொண்டு தான் முதல்வராக பார்ப்பாரே ஒழிய இவர் அத்தனையும் செய்தது இன்னொரு கட்சியின் தலைவரை முதல்வராக்க அல்ல.
Shalin Maria Lawrence : இங்கே ஒரு பிரச்சனை இருக்கிறது.
ஆயிரம்தான் அரசியல் தந்திரங்கள் புரிந்தாலும் ,ஆயிரம் சாதுர்யங்கள் செய்தாலும் இங்கே ஒரு கட்சியின் வெற்றி என்பது முழுக்க முழுக்க அதற்காக வேலை செய்யும் தொண்டர்களையே சார்ந்திருக்கிறது.
அந்த தொண்டன் பேசும் பேச்சும் ,அந்த தொண்டம் புரிய கள பணியுமேதான் ஒரு வாக்காளனை அந்த கட்சியின் சின்னத்தில் பக்கத்தில் இருக்கும் பொத்தானை அழுத்த வைக்கிறது.
அப்படி பட்ட சொல்லும் செயலும் எப்படி இருக்க வேண்டும் ?
தேர்தலுக்கு முன்னேயே தினகரனை தலைமேல் வைத்து கொண்டாடி விட்டு இப்பொழுது தோற்றபின்னும் அவரை ஒரு புனிதர் போல் சித்தரிக்கும் விதம் திமுகவினர் தற்கொலை செய்து கொள்ளுவதற்கு சமம்.
கட்சியின் தலைவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளலாம் ,சிரித்துக்கொள்ளலாம் ,ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லி கொள்ளலாம் .அது அரசியல் நுட்பம்.
ஆனால் தொண்டர்ப்படையோ எதிரியை விழுங்க தயாராக இருக்கும் சிங்கங்களை போல் இருக்கவேண்டும்.
தேர்தல் பிரச்சாரத்தின்போதே தினகரனை கிழித்திருக்க வேண்டும் .செய்யவில்லை.
இப்பொழுது தோற்றப்பின் ,அவர் நல்ல அரசியல்வாதி ,மக்களிடம் நன்றாக பழகுகிறார் ,சிரிக்கிறார் ,நடக்கிறார், பாஜகவை போல அல்ல,ஓபிஎஸ் போல இல்லை என்று தினகரன் அணி செய்யய் வேண்டிய வேலைகளை திமுகவினர் செய்து கொண்டிருக்கினர் .
இப்பொழுதும் கூட தினகரனை அட்டாக் செய்து பேசாமல் அவருக்கு சாமரம் வீசி கொண்டிருப்பது மிக மிக கேவலமானது.
தென் மாவட்ட சாதி வன்முறை ,மன்னார்குடி மாபியா ,பினாமி கம்பனிகள் ,டாஸ்மாக் ,நில மோசடி என்று ஆயிரம் சொல்லலாம் தினகரன் மற்றும் குடும்பத்தை பற்றி.
நான் கேக்குறேன் ,உனக்கு என்ன அரசியல் நாகரிகம் ? ஸ்டாலின் நாகரிகம் பாக்கலாம் .நீ பாத்தா உனக்கும் இருக்குறதும் போச்சு.
இப்படி எல்லாம் இருந்தா திமுகவை அந்த ஆண்டவனாலேயே காப்பாத்த முடியாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக