வியாழன், 21 டிசம்பர், 2017

டிவி தொகுப்பாளினி டி டி திவ்வியதர்ஷினி விவாகரத்து மனு தாக்கல் செய்தார்

 சென்னை: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடியும், அவரது கணவரும் பிரிய என்ன காரணம் என்று தெரிய வந்துள்ளது. பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற டிடி தனது பேச்சால் மிகவும் பிரபலமானார். டிவி நிகழ்ச்சிகள் தவிர்த்து சினிமா படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 
நீதிமன்றம் நீதிமன்றம் டிடியும், அவரது கணவர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனும் பரஸ்பர விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களின் முடிவில் தீர்க்கமாக இருந்தால் 6 மாதத்தில் அவர்களுக்கு விவாகரத்து கிடைத்துவிடும். பிரச்சனை பிரச்சனை திருமணத்திற்கு பிறகு டிடி டிவி நிகழ்ச்சிகள், படங்களில் நடிப்பது ஸ்ரீகாந்த் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் டிடிக்கும் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தாருக்கும் இடையே பிரச்சனையாக இருந்தது. 
 ஏற்கனவே டிடியின் வீட்டில் பிரச்சனை புகைந்து கொண்டிருந்தபோது சுசிலீக்ஸ் மூலம் புகைப்படம் வெளியானது மேலும் பிரச்சனையாகிவிட்டதாம். 
சுசிலீக்ஸால் தான் டிடியின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை பூதாகரமாக வெடித்துவிட்டது என்று கூறப்படுகிறது. மனைவி மனைவி டிடியும், ஸ்ரீகாந்தும் ஏற்கனவே பிரிந்து தான் வாழ்கிறார்கள். இந்நிலையில் சட்டப்படி பிரியவே விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
tamil.filmibeat.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக