வியாழன், 21 டிசம்பர், 2017

சென்னை டு சிங்கப்பூருக்கு கருணை காட்டிய தமிழ் ராக்கர்ஸ்

    Director Abbas Akbar Request To Tamil Rockers
  • NDTV :இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
  • தமிழ்ராக்கர்ஸிடம் படத்தின் இயக்குநர் ரெக்வஸ்ட் வைத்தார்
  • இன்று ‘C2S’ லிங்கை இணையதளத்தில் இருந்து நீக்கி விட்டனர்
  • அறிமுக இயக்குநர் அப்பாஸ் அக்பர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘சென்னை 2 சிங்கப்பூர்’. இதில் ஹீரோவாக கோகுல் ஆனந்த் என்பவர் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அஞ்சு குரியன் டூயட் பாடி ஆடியிருந்தார். முக்கிய வேடத்தில் ராஜேஷ் நடித்திருந்தார். ஜிப்ரான் இசையமைத்திருந்த இதற்கு கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்திருந்தார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.

    ‘காமிக்புக் ஃபிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சார்பில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இதனை தயாரித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் வெளியானவுடன் ‘தமிழ்ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன்’ போன்ற சில பைரசி இணையதளங்களும் படத்தை அப்லோட் செய்து விட்டனர். இந்நிலையில், நேற்று இயக்குநர் அப்பாஸ் அக்பர் “நாங்க இப்படத்திற்காக 5 வருடங்கள் கஷ்டப்பட்டு உழைச்சு, ரூ.8 கோடி செலவு பண்ணியிருக்கோம்.

    படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அதுனால, தயவு செய்து ஒரு 30 நாட்களுக்கு மட்டும் எங்களுக்காக உங்க இணையதளத்தில் இருந்து படத்தை தூக்கிடுங்க. 31-வது நாள் மறுபடியும் நீங்க அப்லோட் பண்ணிக்கோங்க” என்று ரெக்வஸ்ட் வைத்தார். தற்போது, ‘தமிழ்ராக்கர்ஸ்’ அட்மின் இயக்குநர் அப்பாஸ் அக்பரின் வேண்டுகோளுக்கு இணங்க ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் லிங்கை தங்களது இணையதளத்தில் இருந்து நீக்கி விட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக