செவ்வாய், 12 டிசம்பர், 2017

தெலுங்கு நடிகர் விஜய் தற்கொலை .. மனைவியே காரணம் என்று விடியோவில் .....


வெப்துனியா :பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் விஜய் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம், தெலுங்கு சினிமா உலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பொம்மரிலு உள்ளிட்ட பல தெலுஞ்கு படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் விஜய் சாய். இவர் ஹைதராபாத்தில் உள்ள ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்தார். இவருடன் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, இவரின் மனைவி விவாகரத்து பெற்று தன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும், பணம், நகை ஆகியவற்றைக் கேட்டு விஜய் சாய்க்கு மனதளவில் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதோடு, அவர் பயன்படுத்தி வந்த காரையும் ஆட்களை அனுப்பி பறித்துக்கொண்டாராம். இதனால், விரக்தியின் உச்சிக்கு சென்ற விஜய் சாய், தனது மரணத்திற்கு தன் மனைவி மற்றும் அவரது வழக்கறிஞர் ஆகிய இருவருமே காரணம் என செல்பி வீடியோ எடுத்து வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக