திங்கள், 4 டிசம்பர், 2017

லலிதா பகீர் : ஜெயாவின் தாய் சந்தியாவே ஜெயராமனை விஷம் வைத்து கொன்றார்..... சைலஜாவின் தந்தை ஜெயராமன் இல்லை .. தாய் சந்தியாதான்

Mayura Akilan Oneindia Tamil சென்னை: ஜெயலலிதா ஈகோ பிடித்தவர். அதானால் உறவினர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை என்று அவரது அத்தை மகள் லலிதா கூறியுள்ளார். அது மட்டுமல்லாது ஜெயலலிதாவின் தந்தைக்கு அவரது தாயார் சந்தியா விஷம் வைத்து கொன்றார் எனவும் திடுக்கிடும் தகவலையும் வெளியிட்டுள்ளார்.. சன் நியூஸ் டிவி சேனலுக்குப் பேட்டியளித்த ஜெயலலிதாவின் அத்தை மகளான பெங்களூரு லலிதா, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி பல்வேறு ரகசியங்களை வெளியிட்டு வருகிறார். சோபன்பாபுவிற்கும் ஜெயலலிதாவிற்கும் பெண் குழந்தை பிறந்தது உண்மை என்று சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார். சசிகலாவிற்கு தெரியும் ஜெயலலிதாவிற்கு 1980ல் பிரசவம் பார்த்தது எனது பெரியம்மதான் என்று கூறிய லலிதா, தன்னிடம் ஜெயலலிதா சத்தியம் வாங்கிக்கொண்டதாக கூறினார். 
திருமணத்திற்கு முன்பே ஜெயலலிதாவிற்கு குழந்தை பிறந்தது என்றும் தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்தது சசிகலாவிற்கும் தெரிந்திருக்கும் என்றும் அவர் கூறினார். 
  தற்போது மீண்டும் சன் நியூஸுக்கு லலிதா அளித்த பேட்டியில், ஜெயலலிதாவின் ஈகோதான் உறவினர்களை நெருங்கவிடாமல் தடுத்து விட்டது. ஜெயலலிதாவின் அப்பாவிற்கு விஷம் கொடுத்து கொன்று விட்டனர். சந்தியாதான் விஷம் கொடுத்து விட்டார் என்று எனது தாய் கூறியுள்ளார்.
</ இதனையடுத்து அவர்களுடன் யாரும் தொடர்பு கொள்ளவில்லை. ஜெயலலிதாவின் தந்தையின் இன்னொரு மனைவி மகனான (ஜெயலலிதாவின் சகோதரர் உறவு முறை) வாசுதேவனுடன் பேசியதில்லை. வாசுதேவன் சொல்வது பொய். இந்த சொத்தில் ஒரு பைசா கூட கிடைக்காது. வாசுதேவனுக்கும் ஜெயலலிதாவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஜெயலலிதாவின் சொத்துக்கள் வாசுதேவனுக்கு சொந்தமில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அம்ருதா வாரிசு என்று நான் எந்த டிவி சேனலிலும் கூறவில்லை. டிஎன்ஏ டெஸ்ட் மூலம் நிரூபிக்கட்டும். அம்ருதாவை வளர்த்தது சைலஜாதான். அம்மா, அப்பா யார் என்று நிரூபித்துக்கொள்ளட்டும். ரஞ்சனியும், அம்ருதாவும் என்னை வந்து பார்த்தார்கள் நான் கையெழுத்து போட்டேன் என்றும் கூறியுள்ளார். சந்தியாவின் மகள் ஷைலஜா சந்தியாவின் மகள் ஷைலஜா அதே போல அம்ருதாவை வளர்த்த ஷைலஜாவும் சந்தியாவிற்கு பிறந்தவர்தான். 
;
ஆனால் ஷைலஜாவின் தந்தை வேறொருவர். அது ஜெயராமன் இல்லை; ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே இந்த சர்ச்சை எழுந்தது என்றார் லலிதா. ஜெயலலிதா உடனான தொடர்பு 1970களில் விட்டுப்போனதாக கூறும் லலிதா, 1980ல் குழந்தை பிறந்ததாக கூறுகிறார். அதுவும் வீட்டில் பிறந்ததாக கூறுகிறார். இத்தனை ஆண்டுகள் கழித்து இதனை கூறுவது சொத்துக்காக இல்லை என்றும் கூறியுள்ளார் லலிதா.
//tamil.oneindia.com/n

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக