ஞாயிறு, 31 டிசம்பர், 2017

சுப. உதயகுமார் :ரஜினிக்கு என்ன கொள்கை இருக்கிறது?

Mohan Prabhaharan - Oneindia Tamil : நெல்லை : ரஜினியின் அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பு தமிழக மக்களிடையே எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் தெரிவித்து உள்ளார். தனிக்கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக ரஜினி இன்று அறிவித்து உள்ளார். ரஜினியின் இந்த அறிவிப்பல் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு  அவர் பதிலளித்தார். கூடங்குளம்  அணு உலை கூடங்குளம் அணு உலை மத்திய தணிக்கை குழு அறிக்கையிலேயே கூடங்குளம் அணு உலைகள்  முதல் இரண்டு யூனிட்டுகள் தரமற்றவையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை தான் நாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இதற்காக இந்த அரசு எங்களின் மீது பல்வேறு வழக்குகளை போட்டு உள்ளது. இங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னமும் பாதிக்கப்பட்டு உள்ளது. அணு உலை கட்டுமானம் அணு உலை கட்டுமானம் இதனால் எங்களின் மீது போடப்பட்டு உள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.
அடுத்த யூனிட்டுகள் கட்ட முடியாது என்பதற்காக, அணு உலையை சுற்றி 30 கி.மி., பரப்புக்குள் எத்தனை மக்கள் வசிக்கிறார்கள் என்னும் தகவலை தர மாவட்ட நிர்வாகம் மறுத்து வருகிறது. இதை எதிர்த்து அடுத்த கட்ட போராட்டங்களில் இறங்க உள்ளோம். மாவட்ட ஆட்சியர் இதற்கான தீர்வை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். சாதி மத இன பிரச்னைகள் சாதி மத இன பிரச்னைகள் எங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகளை உடனடியாக எங்களிடம் அரசு ஒப்படைக்க வேண்டும். 
தவறு செய்த அதிகாரிகளை அரசு விசாரிக்க வேண்டும். மக்களிடம் கருத்து கேட்காமல் அணு உலை கட்டிவிட்டு, எதிர்ப்பு வலுத்ததும் சாதி மத இன உணர்வு ரீதியில் பிளவு செய்ய முயற்சிக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தனிக்கட்சி எதற்காக? தனிக்கட்சி எதற்காக? தமிழகத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழலை வைத்து சில நடிகர்கள் அரசியலுக்கு வந்து ஆதாயமடைய திட்டமிடுகிறார்கள். 
ரஜினிக்கு என்ன கொள்கை இருக்கிறது என்பதை முதலில் விளக்கட்டும். இரண்டு வருடத்திற்கு பிறகு தனிக்கட்சி ஆரம்பிக்க இப்போது எதற்கு இந்த அறிவிப்பு? இது முழுக்க முழுக்க மக்களை குழப்பும் வேலை. மக்கள் விரும்பாத அறிவிப்பு மக்கள் விரும்பாத அறிவிப்பு ரஜினி அரசியலுக்கு வருவதால் மக்களுக்கும், நாட்டுக்கும் எந்த நல்லதும் இல்லை. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அவர் வருவதை தமிழக மக்களும் விரும்பவில்லை. அப்படியே ரஜினி வந்தாலும் போயஸ் தோட்டத்தில் இருந்து வந்த இன்னொரு அரசியல்வாதியாகவே மக்களால் கருதப்படுவார் என்று சுப.உதயகுமார் தெரிவித்து உள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக