செவ்வாய், 12 டிசம்பர், 2017

ரஜினி வீட்டின் முன் லூசு ரசிகர்கள் கோஷம் ...

மின்னம்பலம் :ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று (டிசம்பர் 12) அவர் வெளியூர் சென்றதால் ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரஜினியின் 68ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவர் தனது ரசிகர்களைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. வழக்கமாக ரஜினி அவரது பிறந்தநாளன்று தனது ரசிகர்களைச் சந்திப்பார். இந்நிலையில் இன்று அதிகாலை முதலே சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரின் வீட்டின் முன்பு ரசிகர்கள் கூடினர். காலையில் வீட்டிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சாலையில் வைத்தே கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாடினர்.

இன்று ரஜினி தனது ரசிகர்களைச் சந்திக்க மாட்டார், அவர் காலை ஆறு மணிக்கே வெளியூர் பயணம் சென்று விட்டார் என அவரது வீட்டின் முன்பு கூடியிருந்த ரசிகர்களுக்குக் காவல்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ரசிகர்களை கலைந்துபோகும்படி காவல்துறையினர் அறிவுறுத்தினர். இதனால் ரசிகர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ரசிகர் மன்றத் தலைமையிலிருந்து முறையாக அறிவிப்பு வெளியாகும் வரை கலைந்து போக மாட்டோம் எனக் கூறிய ரசிகர்கள் ரஜினி வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக