ஞாயிறு, 10 டிசம்பர், 2017

தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் அடிதடி ...சேரன் விஷால் பேட்டி.. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்

.arasuseithi.com : தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டம் இன்று(டிச.,10) சென்னையில் நடைபெற்று வருகிறது.
நீதியரசர் ராமநாதன் மேற்பார்வையில் பொதுக்குழு கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தலைமையில் நடந்து வரும் இக்கூட்டத்தில் பிரகாஷ் ராஜ், ஆர்.கே.செல்வமணி, எஸ்.ஏ.சந்திரசேகர், தங்கர் பச்சான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் அசோக் குமார் மரணம், கந்துவட்டி பைனான்ஸ் முறை, தயாரிப்பாளர்கள் சங்க வைப்பு நிதி கணக்கு தாக்கல், கேபிள் டி.வி உரிமம், சேட்டிலைட் உரிமம், டிஜிட்டல் சினிமா ப்ரொஜக்ஷன் கட்டண குறைப்பு, ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு எனப் பல விஷயங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் தனது கௌரவ செயலாளர் பதவியை ஞானவேல் ராஜா ராஜினாமா செய்தார். அவரது பொறுப்புகளை யாருக்கு அளிப்பது போன்ற முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், கூட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே மைக் உள்ளிட்டவற்றை பிடுங்கி சேரன் தரப்பினர் ரகளையில் ஈடுபட்டனர்.

விஷால், தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி சேரன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சிலர் வாக்குவாதம் செய்து, ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பொதுக்கூட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ரகளை காரணமாக நேரம் குறிப்பிடாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெளியே வந்த சேகரன் தரப்பு தயாரிப்பாளர்கள் விஷாலை கைது செய்யக் கோரி கோஷமிட்டனர். முன்னதாக கூட்டம் துவங்குவதற்கு முன், சேகரன் தரப்பினர் விஷாலுக்கு எதிரான கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து வந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக