ஞாயிறு, 10 டிசம்பர், 2017

சோனியா காந்தி ... மருமகளாக வந்து மாபெரும் தலைவியான ... !

தினகரன்: டெல்லி: 71-வது பிறந்தநாள் கொண்டாடும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். டெல்லியில் சோனியா இல்லத்தில் திரண்ட காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியும் சோனியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் சோனியா இல்லத்தில் திரண்ட காங்கிரஸ் கட்சினர் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி சோனியா காந்தி நீண்ட ஆயுள், ஆரோக்கியமும் பெற வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இளைஞர் காங்கிரஸ்சார் கேக் வெட்டி சோனியா காந்தி பிறந்தநாளை கொண்டாடினர். அப்போழுது பார்வை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அவர்கள் இனிப்பு வழங்கினர். 1998 ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட்டதை கட்சி மேலிடம் நாளை மறுநாள் அறிவிக்க உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக