வெள்ளி, 22 டிசம்பர், 2017

ரஜினி தமிழருவி மணியன் சந்திப்பு .... குளோபல் வார்மிங் ..மற்றும் வடகொரியா பற்றி ஆலோசனை????

நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் ஆலோசகராக தமிழருவி மணியன் ரகசிய உஉடன்படுக்கை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது.   (ரஜினியிடம் இருந்து புண்ணாக்கை தமிழருவி மணியன் மொத்தமாக வாங்கி ரசிகர் மன்றங்களுக்கு சப்பிளை செய்யும் ஏஜென்சியை கேட்டதாக தெரிகிறது).
Gajalakshmi - Oneindia Tamil சென்னை : டிசம்பர் 31ம் தேதி அரசியல் அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுவதாக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 26 முதல் 31 வரை மீண்டும் சென்னையில் வைத்து தனது ரசிகர்களை சந்திக்கிறார். இந்த சந்திப்பை ஒட்டி தமது நண்பரும் அரசியல் ஆலோசகருமான தமிழருவி மணியனுடன் ரஜினி இன்று தனது போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். ஆலோசனை குறித்து பின்னர் தந்தி தொலைக்காட்சிக்கு தமிழருவி மணியன் அளித்துள்ள தகவலில் நடிகர் ரஜினி டிசம்பர் 31ல் அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
 இதனிடையே செய்தியாளர்கள் சிலருக்கு தமிழருவி மணியன் அளித்துள்ள தகவலில், நடிகர் ரஜினிகாந்துடனான இன்றைய சந்திப்பு வழக்கமான சந்திப்பு தான். டிசம்பர் 26 முதல் 31 வரையிலான நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் ரஜினியே அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடுவார்.
ரஜினியின் அறிவிப்புக்கு முன்பாக எதையும் தெரிவிக்க முடியாது என்றும் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.  இதனாலேயே அவர் ரஜினியுடனான இன்றைய சந்திப்பு குறித்து வெளிப்படையாக எந்த கருத்தையும் கூறவில்லை என்று தெரிகிறது. கடந்த மே மாதத்தில் ரஜினியை சந்தித்த பிறகு ரஜினியின் அரசியல் ஆர்வம் குறித்து மீடியாக்களிடம் கூறி இருந்தார் தமிழருவி மணியன் என்பது குறிப்பிடத்தக்கது.

/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக