வியாழன், 21 டிசம்பர், 2017

கனிமொழிக்கு காங்கிரஸ் வாழ்த்து!

கனிமொழிக்கு காங்கிரஸ் வாழ்த்து!
மின்னம்பலம் :2ஜி வழக்கில் நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மற்றும் குலாம் நபி ஆசாத் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உட்பட அனைவரையும் விடுதலை செய்வதாக சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி இன்று (டிசம்பர் 21) உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பை திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கிடையே தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கனிமொழியை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் தொலைப்பேசி மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோல், காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத் மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோர் கனிமொழியை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணபிரியாவும் கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக