புதன், 27 டிசம்பர், 2017

தினகரன் மீது ட்ராபிக் ராமசாமி வழக்கு பாய்கிறது ... தேர்தல் பணப்பட்டுவாடா ....

tamilthehindu :டிடிவி தினகரனை அவரது துணிச்சல், தன்னம்பிக்கையைக் கண்டு மனதாரப் பாராட்டுகிறேன், ஆனாலும் அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு போடப் போகிறேன் என்று டிராபிக் ராமசாமி பேட்டி அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்த டிராபிக் ராமசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “டிடிவி தினகரனை மனமாரப் பாராட்டுகிறேன், அவர் பயமின்மை, தன்னம்பிக்கை, தைரியம் இந்த மூன்றையும் பணயம் வைத்து இரட்டை இலையை பாதுகாத்த ஆளும் கட்சியினரை எதிர்த்து வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் என்ற முறையில் அவரை மனதாரப் பாரட்டுகிறேன்.

அதேநேரத்தில் ஆர்கே.நகரில் பணப் பட்டுவாடா புகாருக்கு ஆளாகி, வெற்றி பெற்றதைக் கண்டித்து தினகரன் மீது வழக்கு தொடர இருக்கிறேன், வழக்கின் முடிவில் தேர்தல் ரத்தாகும் ஆனால் அதற்கு முன்னதாகவே இந்த ஆட்சி கவிழ்க்கப்படும், புத்தாண்டு தை திங்கள் அன்று ஜனாதிபதி ஆட்சி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக