செவ்வாய், 5 டிசம்பர், 2017

ஒகி புயலுக்கு அரசை குறை கூடக்கூடாது .. சென்னை உயர்நீதிமன்றம் வகுப்பு ?

மின்னம்பலம் ஓகி புயலின்போது கடலில் மாயமான மீனவர்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படையும், கடலோர காவல்படையும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்றும், இயற்கை சீற்றங்களுக்கு அரசை குறை கூற முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசைக் குறை சொல்லக்கூடாது: உயர் நீதிமன்றம்!நவம்பர் 30ஆம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் ஓகி புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மேலும், ஓகி புயல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மாயமானார்கள். புயலால் மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஓகி புயலின் தாக்கத்தினால் கடலுக்குள் மாயமான மீனவர்களைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்த உத்தரவிட வேண்டும் என மீனவர் நலன் அமைப்பு மற்றும் வழக்கறிஞர் சூரியபிரகாசம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று(டிசம்பர் 5) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கடலில் மாயமான மீனவர்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படையும், கடலோர காவல்படையும் தீவிரமாகச் செயல்பட வேண்டும். இயற்கை சீற்றங்களுக்கு அரசை குறை கூற முடியாது. இதனால் ஏற்படும் இழப்புகளை நீதிமன்றம் நிர்ணயிக்க முடியாது. மீனவர்கள் மட்டுமன்றி ஓகி புயலினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து, இந்த வழக்கை முடித்து வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக