வியாழன், 7 டிசம்பர், 2017

மணி சங்கர் அய்யர் காங்கிரசில் இருந்து தற்காலிக நீக்கம்,,,,, மோடி மீது தகாத வார்த்தை பிரயோகம் .

பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்ததால் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம்மாலைமலர் :பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சனம் செய்ததற்காக, காங்கிரஸ் கட்சியில் இருந்து மணிசங்கர் அய்யர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்ததால் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் புதுடெல்லி: குஜராத்தில் முதல் கட்ட பிரச்சாரம் இன்றுடன் முடிவடைவதால், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக, குஜராத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர், பிரதமர் மோடி கீழ்த்தரமான மனிதர். அவர் பண்பட்டவர் அல்ல.
இந்த நேரத்தில் அவர் தரம்தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவது ஏன் என கேள்வி எழுப்பினார். இதற்கு குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பதிலளித்த மோடி, மணிசங்கர் அய்யரின் விமர்சனம் ஒட்டுமொத்த குஜராத்தையே இழிவுபடுத்தி உள்ளது.
குஜராத் மக்கள் இதற்கு தகுந்த பதிலடி தருவார்கள் என்றார். இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, மணிசங்கர் அய்யர் தனது பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். காங்கிரஸ் தலைமையின் கடும் எதிர்ப்பால் மணிசங்கர் அய்யர் தான் தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் அவரது பேச்சுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்த மணிசங்கர் அய்யரை காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் என அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிக்கையில், பிரதமரை தரக்குறைவாக விமர்சனம் செய்த மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் தற்காலிகமாக காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மணிசங்கர் அய்யருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் விடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக