வியாழன், 7 டிசம்பர், 2017

திண்டுக்கல் விபத்து புகழேந்திக்கு எலும்பு முறிவு ..மேலும் 3 தினகரன் ஆதரவளர்களும் காயம்

திண்டுக்கல்லில் கார் கவிழ்ந்து விபத்து: தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு எழும்பு முறிவுமாலைமலர் :திண்டுக்கல் அருகே கார் கவிழ்ந்ததில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் புகழேந்தி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். திண்டுக்கல்லில் கார் கவிழ்ந்து விபத்து: தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு எழும்பு முறிவு திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்த திருமணவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி காலை காரில் சென்றார். காரை அவருடைய டிரைவர் மேத்யூ என்பவர் ஓட்டினார். அவருடன் சேலத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவரும் சென்று உள்ளார். இவர்கள் சென்ற கார், திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலையில் கலெக்டர் அலுவலகத்தை அடுத்துள்ள அஞ்சலி ரவுண்டானா மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் இடதுபக்க தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்தது.

இதில் புகழேந்தியின் கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஜெயராஜ், மேத்யூ ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து 3 பேரும் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே மேல் சிகிச்சைக்காக புகழேந்தி கோவைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக