நக்கீரன் : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட டி.டி.வி. தினகரன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக அவர் எம்.ஜி.ஆர். - ஜெ. நினைவிடத்தில் சென்று மரியாதை செய்துவிட்டு, தேர்தல் அதிகாரி உள்ள அலுவலகம் வரை ஆதரவாளர்களுடன் சென்றார். ;டி.டி.வி.
தினகரனுக்கு ஆதரவாக வந்தவர்களில் ஒரு பெண் தனது கையில் உள்ள நோட்டில் ஏதோ
எழுதிக்கொண்டே சென்றார். இன்னொருவர் டோக்கன் வழங்குவதுபோல சீட்டுகள்
வைத்திருந்தார். இந்த நிலையில் தலைக்கு ரூபாய் 500 பணம் கொடுத்து ஆட்களை
திரட்டியுள்ளதாகவும், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து
வந்துள்ளதாகவும் ஆளும் கட்சியான அதிமுக குற்றம் சாட்டியது. ஆளும் கட்சியின்
இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் விசாரணையில்
ஈடுபட்டுள்ளனர்.&>செய்தி, படங்கள்: அருண்பாண்டியன்,,,படங்களின் மேல் கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக