சனி, 23 டிசம்பர், 2017

சைதாப்பேட்டை நீதிமன்றம் :50 பாலியல் வன்புணர்வு .. 3 சிறையும் ரூ.2800 அபராதம் மட்டுமே ....

Vr Jayanthi : 22 டிசம்பர் 2017 (06:03 IST) சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த அறிவழகன் என்ற குற்றவாளிக்கு வெறும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2800 மட்டுமே அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும் என அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
சென்னை கிண்டி, வேளச்சேரி, ஈக்காட்டுதாங்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து, பாலியல் பலாத்காரம் செய்தல் மற்றும் வீடுகளில் கொள்ளை அடித்தல் உள்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக அறிவழகன் என்பவரை பிடித்து வேளச்சேரி போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் மட்டுமே அறிவழகனால் சுமார் 50 பெண்களின் வாழ்க்கை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 25 பெண்களுக்கு மேல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக அறிவழகனே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்திருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாலியல் பலாத்காரம் செய்வதோடு மட்டுமல்லாமல், அதனை செல்போனில் படம் பிடித்து பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களிடம் அந்த வீடியோவை காட்டி மிரட்டி, மீண்டும், மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும், அறிவழகன் தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தான்.
இத்தகைய கொடூர குற்றங்கள் செய்த குற்றவாளி அறிவழகனுக்கு சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி வெறும் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2,800 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக