சனி, 23 டிசம்பர், 2017

2 ஜி - SC, ST, OBC, MINORITIES அடங்கிய தலித் சமூகம் அடங்கிய முழு தமிழகமும் கொண்டாட வேண்டிய புதிய புறநானூற்று வெற்றி!

Sankar Ganesh : 2G கட்டுக்கதை உச்சத்தில் இருந்தபோது,'வேட்டி கட்டிக்கொண்டு டெல்லி செல்வோரை கண்டு டெல்லி பயப்படுகிறது!' என தமிழர்களனைவரையும்
திருடர்கள் என விளித்தான் சுசாமி. தென்னிந்தியாவை சேர்ந்தவன், அதிலும் தமிழகத்தை சேர்ந்தவன், அதிலும் கருமைநிறம் கொண்டவன்,
அதிலும் பட்டியல் சமூகத்தை சார்ந்த ஒருவன்,
அதிலும் சுயமரியாதைக்காரன்,
அதிலும் திமுக காரன், எப்படி கேபினட் அமைச்சராக இருக்கலாம் என பார்ப்பனீயம் கொதிக்கிறது.
காங்கிரசை வீட்டுக்கு அனுப்ப திட்டம் தீட்டுகிறது ஆர்எஸ்எஸ். பல்வேறு குண்டுவெடிப்புகளை நடத்தி பார்க்கிறது. 
வழக்கமாக கலவரங்களை நடத்தி ஓட்டு வாங்கும் திட்டத்தை செயல்படுத்த தயக்கம் அடைகிறார்கள். ஏனென்றால் நரசிம்மராவ் மற்றும் ராஜீவ் காலத்து காங்கிரஸ் போல், சோனியா காந்தி தலைமையில் இருந்த காங்கிரஸ் இருக்கவில்லை. 
கலவரம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்பதை உணர்ந்து, வேறு வழியை தேடுகிறார்கள். பல்வேறு அந்நிய சக்திகள் வாயிலாக ஆர்எஸ்எஸ் நடத்திய குண்டுவெடிப்புகள் உள்ளூர் ரீதியான பாதிப்பை தான் ஏற்படுத்தியதே தவிர, நாடு முழுமைக்கும் காங்கிரஸ் மீதான எதிர்ப்பலையை கொண்டுவர முடியவில்லை. 
கடைசி ஆயுதமாக ஊழலை கையில் எடுக்கிறார்கள். பாபர் மசூதியை இடித்த பார்ப்பனீயத்தின் ராஜ நாகம் முரளி மனோகர் ஜோஷி, வினோத் ராய் போன்றோர் ஸ்கிரிப்ட் எழுதுகிறார்கள்.
ஆனால், இம்முறை ஊழல் நடக்காமலே ஊழல் குற்றசாட்டு சுமத்துகிறார்கள்.
"கற்பனையில் கடவுளையே கண்டுபிடித்தவர்கள்
கற்பனையான ஊழலை கண்டுபிடிக்க மாட்டர்களா என்ன?"
யாரை பலியிட்டு காங்கிரசை துடைக்கலாம் என சிந்திக்கிறார்கள்.
பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக இல்லாமல் சட்டப்படி செயல்பட்டு கொண்டிருருந்த
"தகத்தகாய சூரியன்" ஆ.ராசா அவர்களை குறிபார்க்கின்றனர்.
ஆனால், அவாளின் தொழில் நேர்த்தியை பாருங்கள்!
பலியாட்டை கூட பட்டியல் சமூகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த இந்துத்துவ பயங்கரவாதிகளின் மனிதத்தன்மையற்ற வன்மம் இதிலிருந்தே தெளிவாகவே நமக்கு விளங்கும்.


எவ்வித குற்றமும் செய்யாத நிரபராதியான அருமை ராசா மீது பழி சுமத்தினார்கள். தாஜ்மகால் கூட ராசாவின் பண்ணை வீடு என அளந்துவிட்டார்கள். கனிமொழியை வழக்கில் சிக்க வைத்தார்கள். கனிமொழி பற்றி அச்சில் ஏற்ற முடியாத வசைகளை திட்டமிட்டு உருவாக்கினார்கள். ஒரு லட்சம் கோடி என்ற கற்பனையில் பிஜேபியை ஆட்சிக்கு வர வைத்து நாட்டையே நீர்மூலமாக்கினர்.
இன்று அனைத்திற்கும் விடை கிடைத்திருக்கிறது.
இந்த தீர்ப்பு, தமிழரனைவரும் கொண்டாட வேண்டியது,
SC, ST, OBC, MINORITIES அடங்கிய தலித் சமூகம் கொண்டாட வேண்டியது,
மாநிலக்கட்சிகள் அனைத்தும் கொண்டாட வேண்டியது,
சமத்துவத்தில் நம்பிக்கை உள்ளோர் கொண்டாட வேண்டியது,
பார்ப்பனீயத்தை எதிர்ப்போர் கொண்டாட வேண்டியது,
உழைக்கும் மக்களனைவரும் கொண்டாட வேண்டியது...
"அநீதி விழும்; அறம் வெல்லும்!"
இந்தியாவில் எப்போதாவது இதுமாதிரியான சம்பவங்கள் நடக்கும். ஆகையால், கொண்டாடி தீர்த்து விடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக