சனி, 2 டிசம்பர், 2017

ஆசிரியர் வீரமணி அய்யா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....திசம்பர் 2, 1933

Devi Somasundaram : திராவிடர் கழகம்.
திக என்று சுருக்கமா அழைக்கப்படும் இந்த இயக்கம் தமிழ் நாட்டின் ஒவ்வொரு ஜீவனோடும் எதோ ஒரு வகையில் தன் தொடர்பை கொண்டிருப்பதன் அந்த இயக்கம் நீர்த்து போகாமல் பாதுகாப்பதில் அதன் தலைமைக்கு உள்ள பல சிக்கலான நிலைகளை தாண்டி சாதித்து வரும் தோழர் வீரமணி அய்யாவின் சாதனை பங்கு நிச்சயம் மகத்தானது..
தமிழ் நாட்டில் திராவிட கட்சிகளை பாதுகாப்பதன் மூலம் சமுக நீதியை நிலை நிறுத்த தன் முயற்சியை எந்த சிக்கலான கால கட்டத்திலும் கை விடாத போராளி அய்யா வீரமணி.
யார் உதவிக்கு வருகிறார்களோ அவர்களை விமர்சிப்பது தான் அறசீற்றம் என்பதை அடிப்படை கொள்கையாய் கொண்ட சமுக மனோ பாவத்திற்கு கட்சிகளும் விலக்கில்லை என்பது அறிந்ததே.

எத்தனை விமர்சனம் வந்த போதும் இயக்கத்தை தொய்வடைய விடாமல் வைத்திருப்பதில் அய்யாவின் பணி மிக சிறப்பானது..மிக கடினமானதும்..
ஒரு இயக்கத்தை காப்பது என்பது அத்தனை சுலபமில்லை. வெளிலேர்ந்து வரும் எதிரிகளை விட உள்ளிருக்கும் துரோகிகளை சமாளித்து கடப்பது அத்தனை சுலபமில்லை... அத்தனையும் சமாளித்து திக என்ற பேரியக்கத்தை காத்து வரும் அய்யா ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக