செவ்வாய், 14 நவம்பர், 2017

குஜராத்தில் பாஜக போர்னோ பிரசாரம் ,,, ஹர்திக் பட்டேல் youtube


மின்னம்பலம் :குஜராத்தைச் சேர்ந்த ஹர்திக் பட்டேல் ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகிவருகிறது. “அது போலியாக மார்பிங் செய்யப்பட்ட வீடியோ” என்றிருக்கிறார் ஹர்திக்.
குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. காங்கிரஸ், பாஜக என இரு பெரும் கட்சிகளுக்கு இடையேயான யுத்தமாக இந்தத் தேர்தல் உருமாறியிருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் பட்டேல் சமூகத்தினரை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது காங்கிரஸ். இதுவரை பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துவந்த பட்டிதார் அனாமத் ஆந்தோலன் சமிதியின் தலைவர் ஹர்திக் பட்டேல், இந்தத் தேர்தலில் தன் பார்வையை காங்கிரஸ் கட்சியின் பக்கம் திருப்பியிருக்கிறார். இது பாஜகவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் ஹோட்டல் அறையொன்றில் ஒரு ஆணும் பெண்ணும் இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் இருப்பது ஹர்திக் பட்டேல் என்று சில தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. இதுபற்றி கருத்து எதுவும் கூறாமல் இருந்த ஹர்திக், இன்று தன் இயக்கத்தினரைச் சந்தித்தார்.
“இது போலியாக மார்பிங் செய்யப்பட்ட வீடியோ. வேறு எந்த வழியிலும் அரசியல் செய்ய முடியாததால், இப்படி இறங்கிவிட்டனர். பாஜக அழுக்கு அரசியலின் ஒரு பகுதி இந்த வீடியோ. என்னைப் பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு, குஜராத் பெண்களைக் கீழ்த்தரமாக சித்தரிக்கின்றனர். இது எதுவும் என்னை பாதிக்காது” என்று கூறினார்.
“பாஜக எனது தனிப்பட்ட வாழ்க்கையின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. நான் ஒரு ஆண், ஆண்மையற்றவன் இல்லை. ஹர்திக் பெரிதாக வளர்கிறான் என்று கோடிக்கணக்கில் பணம் செலவழித்து இதனைச் செயல்படுத்தியிருக்கின்றனர்” என்று பாஜகவின் மீது பாய்ந்திருக்கிறார்.
இந்த விவகாரம் பற்றி பாஜகவின் சார்பில் பேசியிருக்கிறார் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா. “பாஜகவுக்கும் ஹர்திக் வீடியோவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பாஜகவைக் குறை சொல்வதற்குப் பதிலாக, ஹர்திக் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்ய வேண்டும்” என்றிருக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக