திங்கள், 27 நவம்பர், 2017

அம்ருதா Vs தீபா .. சபாஷ் சரியான போட்டி ... RK நகரில் தீபா போட்டியிட முடிவு!

மின்னம்பலம் :ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில்  போட்டியிடுவேன்!ஆர்.கே.நகருக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. திமுக சார்பில் மருது கணேஷ் மீண்டும் போட்டியிடுகிறார், தினகரன் டிசம்பர் 2ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். நாம் தமிழர் சார்பில் கலைக்கோட்டு உதயம் வரும் 29ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். அதிமுகவும் 29ஆம் தேதியே வேட்பாளரை அறிவிக்க உள்ளது.
இந்த சூழ்நிலையில் கடந்த இடைத் தேர்தலில் படகு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட தீபா, தான் மீண்டும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று (நவம்பர் 27) தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்த தீபா, அவரிடம் போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவிடமாக்கும் விவகாரம் தொடர்பாக பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தான் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும், . ஆர்.கே.நகரில் ஏற்கனவே தீவிரமாக பிரசாரம் செய்திருக்கிறேன். அதேபோல், இந்தமுறையும் தீவிர பிரசாரம் செய்வேன் என்றும் தெரிவித்த அவர், ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் பிரச்னைகளை சரி செய்வேன்" என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக தாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும், தங்களுக்குத்தான் இரட்டை இலை சின்னம் வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் தீபா மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத தீபாவுக்கு இரட்டை இலை சின்னத்தை கேட்க உரிமையில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக