tamilthehindu: அதிமுகவில் அடுத்தடுத்து ஏற்படும் பரபரப்பால் எம்.பிக்கள்
எம்.எல்.ஏக்கள் அணி தாவி வருகின்றனர். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில்
தினகரன் அணிக்கு ஏற்பட்ட பின்னடைவை அடுத்து அவரது அணியிலிருந்த மூன்று
எம்பிக்கள் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவினர்.
அதிமுக ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டானது. தினகரன் தலைமையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் செயல்பட்டு வந்த நிலையில் திடீரென தினகரன் ஓரங்கட்டப்பட்டார். பின்னர் ஓபிஎஸ் தனது ஆதரவு எம்.எல்.ஏ, எம்பிக்களுடன் எடப்பாடி அணியுடன் இணைந்தார்.
இதனால் தினகரன் அணி தனியாகவும், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இணைந்து ஒரு அணியாகவும் இயங்கி வந்தனர். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தினகரன் அணிக்கு ஏற்பட்ட பின்னடைவும், தினகரன் அணிக்குள்ளேயே புதிதாக ஏற்பட்டுள்ள முட்டல் மோதலும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தினகரன் அணியில் இருந்த ராஜ்ய சபா எம்பிக்கள் விஜிலா சத்யானந்த், கோகுல கிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் திடீரென இன்று எடப்பாடி அணிக்கு தாவினர். மூவரும் இன்று மதியம் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினர். அப்போது அதிமுக அமைச்சர்களும் எடப்பாடியுடன் இருந்தனர். தினகரன் ஆதரவு எம்பிக்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்திருப்பதன் மூலம் தினகரன் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
கோகுல கிருஷ்ணன் பாண்டிச்சேரி மாநிலம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர். ஏற்கனவே பாண்டிச்சேரி அதிமுக எம்.எல்.ஏக்கள் 4 பேர் எடப்பாடி அணிக்கு ஆதரவளித்து வந்த நிலையில் ராஜ்ய சபா எம்பி கோகுல கிருஷ்ணன் மட்டுமே தினகரன் அணியில் இருந்தார் தற்போது அவரும் அணி தாவியதன் மூலம் தினகரன் அணிக்கு பாண்டிச்சேரியில் ஆதரவு முற்றிலும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் நவநீத கிருஷ்ணன் இணைப்பின் மூலம் அவர் வகித்து வந்த மாநிலங்களவை தலைவர் பதவி அப்படியே இருக்கும் பட்சத்தில் அதிமுகவில் மாநிலங்களவை தலைவர் பதவிக்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட மைத்ரேயனுக்கும் பின்னடைவு என்று அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக