வெள்ளி, 10 நவம்பர், 2017

திருவாரூர் ...ONGC நிறுவனம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க முகாமிட்டுள்ளது.

தயவுசெய்து படித்து பரப்புங்கள்.. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சி மாப்பிள்ளை குப்பத்தில் ONGC நிறுவனம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க முகாமிட்டுள்ளது...
இதுக்குறித்து விளக்கம் கேட்க அப்பகுதி இளைஞர்கள் சென்ற போது, ongc நிறுவனத்தின் சைட் இன்சார்ஜ் ராகுல் என்பவர் மாப்பிள்ளை குப்பம் மாரியம்மன் கோவிலில் பேச்சுவார்த்தை நடத்துவோம்னு கூறி நடத்தியும் உள்ளனர்...
அப்பேச்சுவார்த்தைக்கு ongc காவிரி படுகை மண்டல தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி #இராசசேகர் என்பவர் முன்னின்று நடத்தியுள்ளார்... அப்பேச்சுவார்த்தையில் சுமார் 200 பொதுமக்கள் பங்கேற்று தங்களின் சந்தேகங்களை கேட்டுள்ளனர்... மக்களில் ஒரு இருபதுபேரை மட்டும் தனியே அழைத்து விளக்கம் சொல்வதாக ongc கூறியதை மக்கள் ஏற்கவில்லை... மேலும் இது தொடர்பான அரசின் அனுமதிகளின் ஆதாரங்களை மக்கள் கேட்டப்பொழுது ஒரு வாரத்தில் "நன்னிலம் காப்போம்" இயக்கத்திடம் தருவதாகவும் அதுவரை பணிகளை நிறுத்து வைப்பதாகவும் ongc கூறியுள்ளது...

ஆனால் அனுமதி ஆதாரங்களை ongc தரவில்லை... இதக்குறித்து கேட்டப்பொழுது அனுமதி ஆதாரங்களை DSP இடம் குடுத்துவிட்டோம் போய் வாங்கிக்கொள்ளுங்கள் என திமிராக ongc நிறுவனம் பதிலளித்துள்ளது...
இதற்கு கண்டனம் தெரிவித்து "நன்னிலம் காப்போம்" இயக்கத்தார் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர்... இதற்காக ஆறுபிரிவின் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு நால்வர் சிறையிலைடைக்கப்பட்டு, பிணையும் மறுக்கப்பட்டு வருகிறது...
மேலும் இவ்விவகாரத்தில் பல அத்துமீறல்களும் அடக்கு முறைகளும் நடத்தப்பட்டு வருகிறது... இதுக்குறித்து அப்பகுதியைச் சார்ந்தவர்கள் பொது வெளியிலோ சமூக வலைத்தளங்களிலோ பேசினால் "அன்பாக" மிரட்டப்பட்டு வருகிறார்கள்...
மேலும் இந்த விவகாரத்தை பெரிய அளவில் முன்னெடுக்க முடியாத வகையில் அதிகாரவர்க்கம் அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது..
உறவுகள் கொஞ்சம் சிரத்தை எடுத்து இதை பரப்புமாறு கேட்டுக்கிறேன்..
#save_nannilam இந்த ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்ய உதவி செய்யுங்கள்....
சே.திருநா பாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக