வெள்ளி, 10 நவம்பர், 2017

சத்தீஸ்கார் 8 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்


மாலைமலர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 8 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரக்சிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாநில போலீசார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் அடங்கிய பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சிண்டா குபா பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால், பாதுகாப்பு படையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கிகள், குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக