புதன், 1 நவம்பர், 2017

சகாயத்திற்கு கடைநிலை ஊழியர்கள் கூட ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை: இரா.முத்தரசன் பேட்டி

நக்கீரன் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ’’வடகிழக்கு பருவ மழை முன்கூட்டியே தெரிந்து இருந்தும் எவ்வித முன் எச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை. அரசு எவ்வகையில் இருக்கிறது என்பதற்கு இது உதாரணம். மழை தொடர்வதால் டெங்கு மேலும் பரவும் அபாயம் உள்ளது. இந்த எடப்பாடி அரசின் செயல்பாடு ஆட்சியை தக்க வைக்கவும் இருக்கும் பணத்தை பாதுகாக்கவும் அரசு நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலை கூட நடத்த மறுக்கிறது இந்த அரசு. இது தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது’’ என்று தெரிவித்தார். அவர் மேலும், ‘’ கிராணைட் வழக்கை விசாரிக்கும் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு கடைநிலை ஊழியர்கள் கூட ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை. சகாயம் கொடுத்திருக்கும் ஆவணங்களின் படி கிராணைட் வழக்கை சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மத்திய அரசின் திட்டமான பண மதிப்பிழப்பினால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வரும் 8ம் தேதி கருப்பு தினமாக அறிவித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’’என்று கூறினார். - ஜீவாதங்கவேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக