புதன், 22 நவம்பர், 2017

பூங்குன்றனின் பெண்ட்ரைவ் மூலம் போயஸ் கார்டன் அம்பலம்..


ஜெயலலிதா தாக்கப்பட்டாரா? tamioneindia : சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை தொண்டர்கள் உயிரோடு பார்த்த செப்டம்பர் 22ஆம் தேதியன்று நடந்த காட்சிகள் அடங்கிய சிசிடிவி பதிவுகள் பூங்குன்றன் வசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் வேதா நிலையம் மிக முக்கியமான பாத்திரம். 30 ஆண்டு காலம் தமிழக அரசியலிலும் இந்தியா முழுவதிலும் அரசியல் தலைவர்களினால் உச்சரிக்கப்பட்ட பெயர்தான் போயஸ்கார்டனில் இருந்த வேதாநிலையம் வீடு.
அந்த வீட்டில் ஜெயலலிதாவின் கடைசி நாளாக இருந்தது, செப்டம்பர் 22ஆம் தேதி. அதன்பிறகு தமிழக மக்கள் ஜெயலலிதாவைப் பார்த்தது சடலமாகத்தான். செப்டம்பர் 22, 2016 செப்டம்பர் 22 தான் வேதா நிலையத்தில் ஜெயலலிதா கடைசியாக வாழ்ந்த நாள்.

செப்டம்பர் 22ம் தேதி இரவு 11 மணிக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஜெயலலிதா சேர்க்கப்பட்டார். தனது உயிர் பிரியும் வரை அப்போலோவில்தான் இருந்தார். ஜெயலலிதா தன்னுடைய வாழ்நாளின் கடைசி 75 நாட்களை அப்போலோவில் கழித்தார்.
மயங்கி சரிந்த ஜெயலலிதா வேதா நிலையத்தில் அன்றைய தினம் என்ன நடந்தது? வீட்டில் இருந்த பாதுகாவலர்கள் எங்கே சென்றனர். வீட்டில் ஜெயலலிதாவிற்கு என பிரத்யேகமாக இருந்த ஆம்புலன்ஸ் எங்கே போனது? அப்பல்லோவில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது ஏன் என பல ஆயிரக்கணக்கான கேள்விகள் அதிமுக தொண்டர்கள் மனதில் எழுகின்றன.
ஜெயலலிதா தாக்கப்பட்டாரா? வேதா நிலையத்தில் ஜெயலலிதா தாக்கப்பட்டார் என்று ஓபிஎஸ் அணியில் இருந்தவர்கள் குற்றம் சாட்டினர். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க விசாரணைக்கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் யாருமே எதிர்பார்க்காத ஒரு தடயம் சிக்கியுள்ளது. ஜெயலலிதாவின் உதவியாளர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனர் வீட்டில் ரெய்டு நடந்த போது எதையும் முதலில் ஒத்துக்கொள்ளாத அவர், பின்னர் படிப்படியாக அவர் சொன்ன தகவல்கள் அதிர்ச்சிகரமானதாக இருந்ததாம்.
பென்டிரைவ் கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதா வீட்டில் நிகழ்ந்த சம்பவங்கள், அவரை ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்ட காட்சிகள் அடங்கிய சிசிடிவி பதிவுகள் அடங்கிய பென்டிரைவ் தன்னிடம் இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
கைப்பற்றிய அதிகாரிகள் பூங்குன்றனின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே கடந்த 17ஆம் தேதியன்று வேதாநிலையம் வீட்டில் பூங்குன்றன் அறையில் ரெய்டு நடைபெற்றது. அந்த சோதனையில் சில பென்டிரைவ்கள், லேப்டாப், கம்யூட்டரில் இருந்த ஹார்ட் டிஸ்க்குகளை கைப்பற்றியுள்ளனர்.
மயக்க நிலையில் ஜெயலலிதா பூங்குன்றன் அறையில் கைப்பற்றப்பட்ட பென்டிரைவில் இருந்த சிசிடிவி பதிவில் இரவு 9 மணியில் இருந்து பதிவான காட்சிகள் பரபரப்பான காட்சிகளாக உள்ளன.
இரவு 10.6 மணிக்கு ஆம்புலன்ஸ் நுழைவதும், அதன்பின்னர் மயக்க நிலையில் ஜெயலலிதா ஆம்புலன்சில் ஏற்றப்படும் காட்சிகளும் பதிவாகியுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக