திங்கள், 6 நவம்பர், 2017

மோடி வருகை: கலைஞரின் இல்லத்தில் தமிழிசை சவுந்தரராஜன்... கடும் பாதுகாப்பு

நக்கீரன்:  தினத்தந்தி பவளவிழா மற்றும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று மதியம் திமுக தலைவர் கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்திக்க உள்ளார். மோடி மதியம் 12.30 மணி அளவில் வர உள்ளார். இதற்காக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் காலை 10.45 மணி அளவில் கலைஞரின் இல்லத்திற்கு சென்றனர். கலைஞரின் கோபாலபுரம் இல்லம் உள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. படங்கள்: ஸ்டாலின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக