ஞாயிறு, 26 நவம்பர், 2017

அர்விந்த் கேஜ்ரிவால் மின் பைக் திட்டம் ..காற்று மாசுபாட்டைக் குறைக்க புதிய யோசனை!


காற்று மாசுபாட்டைக் குறைக்க புதிய யோசனை!மின்னம்பலம் :டெல்லி மக்கள் தொடர்ந்து காற்று மாசுபாடு என்ற போருடன் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்ற இந்த வேளையில், அதை சமாளிக்க மக்கள் ஒரு தீர்வை கொண்டு வந்துள்ளனர். மின்-பைக் டாக்ஸி சேவைகள் மூலம் குடியிருப்பாளர்கள் விரைவில் மாசு இல்லாத பயணத்தை தேர்ந்தெடுக்கலாம்.
சுற்றுச்சூழலுக்கு மாசுபாடு விளைவிக்காத முதல் மின்-பைக் டாக்ஸி சேவை கரோல் பாக், ஜாதேவலன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது.தேசிய தலைநகரில் இந்த முன்முயற்சியை எடுப்பது மிகவும் தேவையான ஒன்றாகும்.இந்த முன்முயற்சி குறைந்த விலையுடன் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் மாசுபாடு இல்லாத நகரமாக மாற வழிவகுக்கும் என நம்பப்படுகிறது. ஒருவர் 82528-82528 என்ற எண்ணுக்கு டயல் செய்வதன் மூலம் 5 கிலோமீட்டருக்கு 15 ரூபாயில் பயணிக்கலாம். மேலும், பார்க்கிங் இடங்களிலிருந்து மெட்ரோ நிலையங்களுக்குச் செல்ல இந்த பைக்கைப் பயன்படுத்தலாம். குறிப்பாக,அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
இந்த மின்-பைக் டாக்ஸி சேவை 2016ஆம் ஆண்டு நிகில் மாலிக், கரன் சதா, மற்றும் பவனே ராம்பால் ஆகியோரால் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு நண்பனாக இருக்கும் போக்குவரத்தை பயன்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

இதுகுறித்து கரன் சதா கூறுகையில்,போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும்,உயரும் மாசுபாட்டினை தவிர்க்கவும் இந்த மின்-பைக் டாக்ஸிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.டெல்லியிலுள்ள சாலைகள் அதிகரித்து வருவதால், ஏற்கனவே குறைந்து வரும் காற்று தரத்திற்குக் கணிசமான பங்களிப்பு அளிக்க இது உதவும்.
இதனுடைய முக்கிய குறிக்கோள், பாதுகாப்பான பயணத்தை அளிப்பதுதான். இதில் பணியாற்றும் ஒவ்வொரு ஓட்டுநரும் கடுமையான பயிற்சி சுற்றுகள் மற்றும் போலீசார் சரிபார்ப்புக்கு பின்பு பணி அமர்த்தப்பட்டுள்ளனர். வாடிக்கையாளர் மேலாண்மை மற்றும் திருப்தி, பாதுகாப்பான ஓட்டுநர் நடைமுறைகள், போக்குவரத்து விதிமுறைகளுக்கு ஒத்துழைப்பு மற்றும் முதலுதவி மேலாண்மை ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களில் ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், இதில் பயணிகள் மற்றும் ஓட்டுநர் என இருவருக்கும் காப்புறுதியளிக்கிறது. ஓட்டுநர்கள் ஒவ்வொருவருக்கும் 1 லட்சம் காப்பீடு உள்ளது.இந்தியாவின் முதல் இரு சக்கர வாகன டாக்ஸி சேவையை அமைப்பதன் மூலம், மாசுபாடு இல்லாத மற்றும் குறைந்த விலையில் சேர வேண்டிய இடங்களுக்குச் செல்லவும் உதவும். எங்களது இந்த திட்டம் விரைவில் அனைத்துப் பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக