செவ்வாய், 7 நவம்பர், 2017

சவுதியில் அடுத்தடுத்து இளவரசர்கள் மரணம் ,,, இரண்டு அல்லது மூன்று இளவரசர்கள் ....?

Siva Oneindia Tamil : சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் விபத்து.. இளவரசர் உட்பட 8 பேர் பலி- வீடியோ ரியாத்: சவுதியில் 24 மணிநேரத்தில் இரண்டு இளவரசர்கள் மரணம் அடைந்துள்ளனர். சவுதி அரேபியாவில் உள்ள அசிர் மாகாண ஆளுநராக இருந்த மன்சூர் பின் முக்ரின் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அவர் முன்னால் முடி இளவரசர் முக்ரின் பின் அப்துல் அஜீஸின் மகன் ஆவார். இந்நிலையில் இளவரசர் அஜீஸ் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மணிநேரத்தில் இரண்டு இளவரசர்கள் இறந்துள்ளனர். 44 வயதான அஜீஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. கைது செய்ய வந்தபோது அதை அவர் எதிர்த்த போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் அவர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அங்கு அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. கைதை எதிர்த்தபோது அஜீஸ் பலியானதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மன்னர் ஃபஹதின் இளைய மகன் அஜீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக