செவ்வாய், 7 நவம்பர், 2017

2ஜி வழக்கு தீர்ப்பு தேதி மீண்டும் ஒத்தி வைப்பு .... அடுத்த மாதம் 5 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு

Sivasankaran Saravanan : 2G வழக்கு தீர்ப்பு தேதி மீண்டும் ஒத்திவைப்பு! குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வாய்தா வாங்கி பார்த்திருக்கிறோம், வழக்கறிஞர்கள் வாய்தா வாங்கி பார்த்திருக்கிறோம்! உலக நீதிமன்ற வரலாற்றிலேயே நீதிபதி வாய்தா மேல வாய்தா வாங்குற கேலிக்கூத்தை இப்போது தான் பார்க்கிறோம்! ஆ ராசா மீது முன்முடிவோடு தீர்ப்பெழுதிய ஊடகங்கள் திராணி இருந்தால் நீதிமன்ற நடவடிக்கைகளை பற்றி விமர்சனம் செய்யட்டும் பார்க்கலாம்..!

தினமணி :: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு தேதியை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி இன்று அறிவிக்கிறார்.
 முறைகேடு புகார் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் சில நிறுவன நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.


 2ஜி ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு தேதி அக்டோபர் 25-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அன்று தீர்ப்பு தேதியை அறிவிக்காமல், நவம்பர் 7-ம் தேதி (இன்று) வெளியாகும் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்திருந்தார். இதோடு இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறித்த அறிவிப்பு 3 முறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 3-வது முறை ஒத்திவைப்பு இதுதொடர்பாக நீதிபதி ஷைனி கூறுகையில், தீர்ப்புடன் கூடுதல் ஆவணங்களை சேர்க்க வேண்டிய பணிகள் நடப்பதால் தீர்ப்பு தேதி அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, நவம்பர் 7-ம் தேதி தீர்ப்பு (இன்று) தேதி வெளியாகும் என தெரிவித்தார். தீர்ப்பு தேதி இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிப்பதால் ஆ.ராசா மற்றும் தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோர் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக